ஆக்குநர்சுட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Cc-by_new.svg|thumb|120x120px|[[படைப்பாக்கப் பொதுமங்கள்|படைப்பாக்கப் பொதும]] உரிமங்களில் ஆக்குநர்சுட்டைக் காட்டும் குறியீடு]]
[[பதிப்புரிமை]]<nowiki/>ச் சட்டத்தில், '''ஆக்குநர்சுட்டு''' (''Attribution'') என்பது ஒரு படைப்பின் பதிப்புரிமத்தைக் கொண்டுள்ளவரை முறையாகக் குறிப்பிடுவதைச் சுட்டும். மிக அடிப்படையான ஆக்குநர்சுட்டு முறை என்பது, பெரும்பாலும் ''பதிப்புரிமை © [ஆண்டு] [பதிப்புரிமை உடையவரின் பெயர்] ''என்று குறிப்பிடுவதாக அமையும். ஓர் ஆக்கம் [[பொது உரிமைப் பரப்பு]]<nowiki/>க்கு வரும் வரை இத்தகைய ஆக்குநர்சுட்டை இடுவது தேவையாகும். [[குனூ தளையறு ஆவண உரிமம்]], [[படைப்பாக்கப் பொதுமங்கள்]] போன்ற உரிமங்கள் மேற்கண்ட பொதுவான அறிவிப்புக்கும் கூடுதலான ஆக்குநர்சுட்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கலாம்.<ref>Creative Commons, [http://wiki.creativecommons.org/FAQ FAQ]</ref>
 
ஆக்குநர்சுட்டு என்பது உரிமங்கள் வலியுறுத்தும் மிகவும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாகும். இது, படைப்புகளின் மீது பிறர் போலியாக உரிமை கோருவதைத் தவிர்ப்பதுடன் பதிப்புரிமை உடையவருக்கு உரிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்து அவரது இழப்புகளை ஓரளவேனும் ஈடு செய்யவும் உதவுகிறது. 
"https://ta.wikipedia.org/wiki/ஆக்குநர்சுட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது