காவடியாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Ermn (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
==காவடியின் தோற்றம் குறித்த நம்பிக்கைகள்==
காவடியின் தோற்றம் சிந்து சமவெளி காலத்தில் உருவாகியிருக்கலாம் என சான்று கிடைக்கிறது. சிந்துவில் கிடைத்த சித்திர வடிவ எழுத்துகளில் காவடி எடுப்பதை போன்ற தோற்றமும் உள்ளது .அதற்கு கொடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் மற்ற வார்த்தைகளுக்கும் பொருந்தி வருவதால் சிந்து எழுத்து தமிழே என்று "சிந்து வெளியில் முந்து தமிழ் " என்ற நூலில் நா.பு.பூரணச்சந்திரன்பூரணச்சந்திர ஜீவா பல்வேறு சான்றுகளுடன் விளக்குகிறார். மேலும் சமயத் தொடர்புள்ள விடயங்களின் தோற்றங்கள் தொடர்பில் கதைகள் இருப்பது போலவே காவடியின் தோற்றம் குறித்தும் கதை ஒன்று உள்ளது<ref>[http://temple.dinamalar.com/StoryDetail.php?id=35282 தினமலர்.காம்]</ref>. இதன்படி, அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு அமைய சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான [[இடும்பன்]], சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளைக் காவுதடியில் சுமந்து கொண்டு [[குற்றாலம்|பொதிகைமலை]] நோக்கிச் சென்றானாம். [[பழனி முருகன் கோவில்|பழநியில்]] சுமையை இறக்கி வைத்துவிட்டுப் இளைப்பாறிப் பின் மீண்டு தூக்க முயற்சித்தபோது தூக்க முடியவில்லையாம். அப்போது சிறுவனாக உருக்கொண்டு வந்த முருகப் பெருமான் மலைமேல் இருந்து இடும்பனைக் கேலி செய்யவே சிறுவனை நோக்கிப் பாய்ந்த இடும்பன் தவறி மலையில் இருந்து உருண்டு இறந்தான். பின்னர் அவனை உயிர்ப்பித்த முருகன், இடும்பனின் கோரிக்கைக்கு இணங்கி, இடும்பன் அங்கே காவல் தெய்வமாக இருக்கவும், கோயிலுக்கு காவுதடி (காவடி) எடுத்துவரும் பக்தர்களின் குறைகள் தீர்ந்துவிடவும் வரம் அளித்தாராம். அதிலிருந்து, முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் ஒரு அம்சமாக ஆகியது எனவும், அக்காவடியை கோவிலில் இடும்பன் சந்நிதியில் வைத்த பின்னரே எடுப்பது என்னும் வழக்கம் உருவானது என்றும் கூறப்படுகின்றது. இக் கதையில் இருந்து காவடிக்கும், காவுதடிக்கும் உள்ள தொடர்பு புலப்படுவதையும் கவனிக்கலாம்.
 
==காவடி==
"https://ta.wikipedia.org/wiki/காவடியாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது