தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
மிசா காலக்கட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த [[கு. கலியபெருமாள்|புலவர் கலியபெருமாள்]] போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். <ref>மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104</ref> மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார்.
தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர். தமிழகத்துக்குக் [[காவிரி ஆறு|காவிரியில்]] தண்ணீர் தர மறுக்கும் [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. குறிப்பிட்ட நாளில் தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றி வங்கியைவிட்டு வெளியே வந்தனர். இதை எதிர்பார்த்த காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்தனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் இறந்தனர்.<ref>மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131</ref>
 
=== மற்ற தலைமைகள் ===
தமிழரசன் மறைவுக்குப்பின் தெய்வசிகாமணி எனப்படும் லெனின் தவிப தலைவரானார். இவர் காலத்தில் தவிபவின் நடவடிக்கைகள் மேலும் வேகம் கொண்டன. அதன் கிளைகள் செயங்கொண்டான், அரியலூர், வல்லம், திருச்சி, தென்னார்காடென பெருகின. இவரின் தலைமையில் தவிப காவல்நிலையங்களையும் ஆயுதங்களையும் கொள்ளையடிக்க தொடங்கினர். மார்ச்சு 29 1994 அன்று முத்தாண்டிக்குப்பத்தில் இருந்த காவல்நிலையத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியின் போது தெய்வசிகாமணி கொல்லப்பட்டார். அதன்பிறகு கூவாகம் இராமசாமியும் இளவரசனும் இப்படைக்கு தலைமை தாங்கினர்.
 
== மற்ற அயுதக்குழுக்களுடனான தொடர்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது