நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
வரிசை 12:
 
==சட்டம்==
[[படிமம்:வெண்சுருட்டுAvenue புகைத்தல்of தடைStars prohibition sign.JPG|thumb|right|150px|புகைத்தலுக்கான குற்றக்காசு HK$5000.00]]
இந்த நட்சத்திரங்களின் உலாச்சாலையில் உலாவுவோர், புகைப்பிடிக்கக் கூடாது. ஈருருளி போன்ற வண்டிகளை ஓட்டிக்கொண்டோ, தள்ளிக்கொண்டோ என்றாலும் போவதற்கு அனுமதியில்லை. செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை இங்கு அழைத்துச்செல்ல முடியாது. அவற்றை மீறினால் தண்டக் கட்டணம் அறவிடப்படும். ஆனால் மாற்று வழுவுள்ளோர் தமது முச்சக்கர வண்டிகளில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உதவி புரிவதற்கு என்றும் உதவியாளர்கள் உள்ளனர். வெண்சுருட்டு புகைத்தால், அதற்கான தண்டக் கட்டணம் HK$5000.00 அறவிடப்படும். எவரேனும் புகைத்தால் தயங்காமல் குறிப்பிட்ட இலக்கத்திற்கோ அல்லது '''999''' இலக்கத்திற்கோ அழைத்து புகார் கொடுக்கலாம். சில நிமிடங்களில் காவல் துறையினர் அருகில் நிற்பர். இருப்பினும் இங்கு வாழ் மக்கள் ஹொங்கொங் சட்டத் திட்டங்களை மீறினால் என்ன நடக்கும் எனும் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே உள்ளனர்.
 
[[ஹொங்கொங்கர்|ஹொங்கொங் நாட்டு மக்களை]] பொருத்த வரையில், அவர்கள் இந்த நாட்டை காதலிப்பவர்களாகவே உள்ளனர். இங்கு அநேகமான இடங்களில் "I LOVE HONG KONG", "WE LOVE HONG KONG" எனும் வாசங்களை காணலாம். ஹொங்கொங்கில் வளர்ந்து வரும் இளம் சமுதாயமானது, (ஹொங்கொங்கில் வளரும் தமிழ் குழந்தைகள் உட்பட) தூய்மைப் பேனல் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஹொங்கொங் சட்டங்களை மதிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாவும் வளர்ந்து வருவதைக் காணலாம். இதனை அறிந்த தென்னாசிய மக்கள் கூட இச்சட்டங்களை இங்கு மதித்து நடப்பவர்களாக இருப்பதைக் காணலாம்.
 
==தூய்மை பேனல்==
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது