"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகமும்]] [[பெரியார்|பெரியாரும்]] உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர்.<ref name="williams">{{cite book | first=Rohit | last=Wanchoo| first2=Mukesh | last2=Williams| authorlink=| coauthors= | origyear=| year=2007| title= Representing India: literatures, politics, and identities |edition= | publisher=Oxford University Press| location= | id=ISBN 0195692268, ISBN 9780195692266| pages=73| url=http://books.google.com/books?id=3uYTAQAAIAAJ}}</ref> இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. [[இந்தியா]] [[அரசியல் விடுதலை|விடுதலை]] பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, [[இந்தி]]யைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்]] தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. [[பெரியார்|பெரியாரின்]] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த [[ம. பொ. சிவஞானம்]] மற்றும் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு.வி.க]] தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy522"/><ref name="vasantha">{{Harvnb|Kandasamy|Smarandache|2005| pp=108-110}}</ref>
 
ஜூலை 17, 1948ல் [[திராவிடர் கழகம்]] (தி.க) ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், [[கருப்புக் கொடி போராட்டம்|கருப்பு கொடி]] போராட்டங்கள்]], அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக [[அண்ணாதுரை]], [[பெரியார்]] உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் [[அரசியல் விடுதலை|விடுதலை]] செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. [[டிசம்பர்]] 18 ஆம் தேதி [[பெரியார்]] மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர் [[இந்தி]]ப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் [[இந்தி]] வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.<ref>{{cite book|last=Ravichandran|first=R|coauthors=C. A. Perumal|title=Dravidar Kazhagam - A political study|location=Madras|chapter=5|url=http://dspace.vidyanidhi.org.in:8080/dspace/bitstream/2009/4724/6/MAU-1982-082-5.pdf|accessdate=17 February 2010|publisher=[[சென்னைப் பல்கலைக்கழகம்]]| year=1982|pages=177-180}}</ref>
 
== இந்திய அரசியலமைப்பில் மொழிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2140879" இருந்து மீள்விக்கப்பட்டது