நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
S.Kema (பேச்சு | பங்களிப்புகள்)
initialization
வரிசை 18:
 
ஆயம் இருந்த இடத்தையும் ஆலாத்தி வெளியையும் தாண்டி கிழக்குநோக்கி திரும்பினால் வீதியின் இரு மருங்கிலும் விண்தொட்டு விளையாடும் தென்னைகளும் , தோப்புக்களாகப் பனைகளும் தோன்றுகின்றன.  தென்னை, பனை உபயோகம் எல்லாம் உலகிற்கு தெரிந்தவையே .ஆயினும் பனை பற்றி கூறினால் நுங்கு,  பழம் ,பதநீர் , கள் , கிழங்கு,  இவை அனைத்தும் மூளை விருத்திக்கு சிறந்தவை . நீர் இறைக்கும்  "சிக்மா" இயந்திர உதிரிப்பாக தொழிற்சாலை, இறால் கணவாய் பதனிட்டு  வெளிநாடுகளுக்கு அனுப்பிய தொழிற்சாலை, சவர்கார தொழிற்சாலை,  கண்ணாடிதொழிற்சாலை, மின்விசை கம்பித்தொழிற்சாலை (Wire Factory), தேங்காய் எண்ணெய்தொழிற்சாலை , பழக்கூழ்தொழிற்சாலை (Jam Factory), அரச உணவுக்களஞ்சியம் ,அரிசி ஆலைகள் இரண்டு இப்படி எத்தனையோ உள்நாட்டு போரினால் உருக்குலைந்து உபயோகம் அற்றுபோனதை காணமுடியும். சிறிய ஊர் ஆயினும் பெருந்தொகையானோருக்கு வேலைவாய்ப்புக்களை கொடுத்த இடம் முடியிழந்த மன்னன் போல் , பதியிழந்த பாவையை போல் வடிவிழந்து போயிற்று.
[[படிமம்:கண்டி வீதி எல்லை .jpg|thumb|கண்டி வீதி எல்லை ]]
 
அதனை தாண்டி நாவற்குழி சந்தி. கண்டி வீதியின் சிறு வளைவொன்று வடக்குபக்கம் திரும்புகிறது. இவ்விடம் நாவற்குழி சந்தி என்று இன்றும் கூறப்படுகிறது . சாவங்கோட்டை என்று சொன்னால் பலருக்கு தெரியாது . எங்கள் கிராமத்திலும் அயல் கிராமங்களிலும் இருக்கின்ற முதியவர்களுக்கு தெரியும் . அவர்கள் இவ்விடத்தை இன்றும் சாவங்கோட்டை என்றே கூறுகின்றனர்.
 
யாழ்ப்பாண சரித்திரத்தில் சாவங்கோட்டையும் முக்கியஇடம் பெறுகின்றது. 13  ஆம்  நூற்றாண்டில் சந்திரபானு என்னும் சாவுகமன்னன் யாழ்ப்பாண குடாநாடு, வன்னிப்பிரதேசம், திருகோணமலை ஆகிய இடங்களை ஆட்சிசெய்தான் என வரலாறு கூறுகின்றது .(யாழ்ப்பாண இராட்ச்சியம்  பக்கம்  31  பதிப்பாசிரியர் – கலாநிதி .சி .க .சிற்றம்பலம் )  சாவக்காடு, சாவங்கோட்டை , சாவகச்சேரி என்பன இதற்கு சான்று பகர்க்கின்றன. பாண்டியனின் படையெடுப்பில் சந்திரபானு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான் என சரித்திரம் கூறும் வேளை, சாவுகரின் ஆட்சி காலத்திலும் அதன் பின்னரும் சாவங்கோட்டை என பெயர் வாங்கப்பட்ட இந்த இடத்தில் சவுகர் கல்லாலும் களி மண்ணாலும் சிறிய கோட்டை ஒன்று கட்டியிருந்தார் என்றும் அக்கோட்டை பாண்டியனால் அழிக்கப்பட்டதென்றும் இங்குள்ள முதியோர் இன்றும் கூறுகின்றனர். இதற்கு தகுந்த ஆதாரம் அகப்படவில்லை.  ஆயினும் கோட்டையினை இடித்தெறிந்த பாண்டியர் நிர்சிங்கமல்லன் என்பவனை காவலனாக நியமித்து இருக்க இடமும் ஏனைய வசதிகளும் கொடுத்தார்கள் எனவும் பிற்காலத்தில் அவனுக்கு நினைவாலயம் ஒன்று சாவகன்கோட்டைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
[[படிமம்:புகையிரத நிலையம்.jpg|thumb|புகையிரத நிலையம்]]
 
"முச்சந்தி" என்றும் சாவங்கோட்டை என்றும் பெயர் பெற்றுள்ள இடம் உண்மையிலேயே நாற்சந்தியே.  நான்கு வீதிகள் சந்திக்கின்றன. யாழ்ப்பாணம் செல்லும் வீதி , கண்டிவீதி, கேரதீவுவீதி, புகையிரதவீதி. புகையிரத நிலையம் வரை செல்லும் வீதி மிகச்சிறியது. சந்தியில் இருந்து தெற்குபக்கமாக சென்றால் சம்பத்வங்கியினால் அமைக்கப்பட்ட மிகவும் அழகான புதியகட்டடம். அதுவே நாவற்குழி  "ரெயில் வேஸ்ரேசன் " போர் தொடங்குவதற்கு முன்னர் கைதடி என்னும் பெரிய கிராமத்தவர்களுக்கும்,  நாவற்குழி, தச்சன்தோப்பு போன்ற சிறிய கிராமத்தவர்களுக்கும் பிரயாணத்துக்கு அத்தியாவசியமாக விளங்கிய புகையிரதநிலையம் இது. இக்கிராமங்களில் உற்பத்தியான பிரதான பணவரவு தந்த புகையிலை சிற்பம் சிற்பமாக இந்த புகையிரத நிலையத்தில் ரயில் பெட்டிகளில் மலைநாட்டுக்கு அனுப்பப்பட்டன. இக்கட்டடத்துக்கு தென்பகுதியில் பெருந்தொகையான வீடுகள் காணமுடியும் . அவை UNP ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட  300  வீடுகள் ஆகும்.
 
வரிசை 37:
 
=== சித்தி விநாயகர் ஆலயம் ===
[[படிமம்:சித்தி விநாயகர் ஆலயம் .jpg|thumb|சித்தி விநாயகர் ஆலயம் ]]
கேரதீவு வீதிக்கு தெற்கு பக்கம் சென்றால் சித்தி விநாயகர் ஆலயம் நாற்புறமும் வீடுகளும் தென்னந்தோப்புகளும் போற்றும் சுவையுடைய பொன்னிறம் சேர்கனிமாவும் , நாவல் , வேப்பமரங்களும்,  செந்நெல் விளைவயலும், செந்தாமரை குளமும், கந்தனுடைய அண்ணனாம் கணபதியின் ஆலயமும், வாசிகசாலையும், வளரும் சிறார்களுக்கு கல்வி வழங்கிட பாலர் பள்ளியும் கொண்ட இந்த குறிச்சியினை  "பந்தெறிந்தான் வெளி " என்றும் தீப்பாய்ந்த பள்ளமென்றும் கூறுவர் .முன்னையோர் கூற்றுப்படி "பந்தெறிந்தான் வெளி", "தீப்பாய்ந்த பள்ளம்"என்பன காரணப் பெயர்களே.
 
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது