மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
'''மீசாலை'''[[இலங்கை]] [[வட மாகாணம்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது செல்கிறது. இவ்வீதியின் வழி [[சாவகச்சேரி]]யில் இருந்து இவ்வூர் சுமார் 3 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[கொடிகாமம்|கொடிகாமத்தில்]] இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு [[தொடர்வண்டிப் பாதை]]யும் இருந்ததுடன் இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்திருந்தது.
 
== வரலாறு ==
வரிசை 10:
யாழ்ப்பாண மாவட்டத்தின் கிராமச்சங்கங்கள் 03.02.1928ம் திகதியில் இருந்து அரசினால் அங்கிகரிக்கப்பட்டு 08.06.1928ம் திகதி 7647ம் இலக்க வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. இவை 1928 ல் [[கிராமச்சங்கமாக]] ஆரம்பிக்கப்பட்டது. இதில் மீசாலையின் தென்பகுதி உள்ளடங்கலாக சாவகச்சேரிப் பகுதி சாவகச்சேரி கிராமசபையாக மாற்றம் பெற்று 22.03.1941ல் கிராமசபையாக அனுமதிக்கப்பட்டு 1941.03.28 ம் திகதி 8730 இலக்க வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1949.01.01 ம் திகதி மீசாலைப்பகுதி ஓர் வட்டாரமாக உள்ளடங்கிய பட்டினசபையாக தரம் உயர்த்தப்பட்டு மாற்றம் பெற்றது. பின் 1964 ல் மீசாலையின் தெற்குப்பகுதி உள்ளடங்களாக நகரசபையாக தரம் உயர்த்தப்பட்டது. மீசாலையின் மீதிப்பகுதி பட்டினசபைக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது.பின் அவை மாற்றம் பெற்று சாவகச்சேரி பிரதேசசபையாக விளங்கி வருகின்றது. அந்தவகையில் மீசாலைக்கிராமமானது தென்பகுதி சாவகச்சேரி நகரசபைக்குட்பட்டதாகவும், வடபகுதி சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது. இவை அனைத்தும் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டதாக அமைந்துள்ள போது தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவின்  நடுப்பகுதியானது சாவகச்சேரி நகரசபைக்குட்பட்டதாகவும் சுற்றியுள்ள பகுதிகள் சாவகச்சேரிப் பிரதேச சபைக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவானது 232.19 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் சாவகச்சேரி நகரசபையானது 31.29 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் மீசாலையின் கிழக்குப்பகுதி 3.84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் மீசாலையின் மேற்குப்பகுதி 3.84 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டதாக் 7.68 சதுரகிலோ மீற்றர் நகரசபைக்குட்பட்டதாகவும் மீசாலையின் மீதிப்பகுதி சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவும் அமைந்துள்ளது. அதே வேளை தென்மராட்சிப்பகுதியானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட பிரதேச செயலகமாக விளங்குகிறது. இப்பிரதேச செயலகமானது 60 கிராமசேவையாளர் பிரிவையும் 130 கிராமங்களையும் 21788 குடும்பங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
 
இந்த வகையில் ஆரம்பகாலத்தில் கிராமங்களை நிர்வகிக்க கிராமமட்டத்தில் அதிக அதிகாரங்களைக் கொண்டவராக கிராமந்தோறும் உடையார்கள் என நியமிக்கப்பட்டார்கள். அந்த வகையில் மீசாலைப் பகுதியை நிர்வகிக்க வீரவாகு உடையார் அவர்கள் நியமிக்கப்பட்டு வீரவாகுஉடையார் நிர்வகித்து வந்தார். உடையார் என்ற பெயரில் நிர்வகித்து வரும் போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் மாறிய போது கிராமங்கள் தோறும் கிராம விதானை என விதானைமார் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உடையார் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு பின் உடையார் பதவி அற்றுப்போக கிராம விதானைமார். நிர்வகித்து வந்தார்கள். கிராம விதானைமாரை மேற்பார்வை செய்ய D.R.O    என்ற அதிகாரியை நியமித்து அவரின் மேற்பார்வையில் கிராம விதானைமார் செயற்பட்டு வந்தார்கள். அப்போது மீசாலையின் முதல் கிராம விதானையாராக பரமு வேலுப்பிள்ளை விதானையார் அவர்கள் 1930 ம் ஆண்டு காலப்பகுதியில் பொறுப்பேற்றுக் கொண்டார். வேலுப்பிள்ளை விதபனையாரின் சுகயீனம் காரணமாக 1944ம் ஆண்டளவில் மீசாலை தெற்கு, மீசாலை வடக்கு எனவும் மீசாலை தெற்குப் பகுதிக்கு  கிராம விதானையாராக கனகசபை சதாசிவம் அவர்களும், மீசாலை வடக்கிற்கு இராசையா அவர்களும் கிராம விதானையாக நியமிக்கப்பட்டார்கள்.
 
அந்தக்காலத்தில் D.R.O  என அழைக்கப்பட்டு நிர்வகித்து வந்த காரியாலயமானது பின்பு பெயர் மாற்றம் பெற்று உதவி அரசாங்க அதிபர் பணிமனை எனவும் உதவி அரசாங்க அதிபர் எனவும் மாற்றம் பெற்று  பின் பிரதேச செயலகம் எனவும் பிரதேச செயலர் எனவும் பெயர்மாற்றம் பெற்று தற்போது செயற்பட்டு வருகின்றது. இந்த பணிமனையானது அதன் பகுதிக்குட்பட்ட அரச நிர்வாகம் மற்றும் சகல நடவடிக்கைகளையும் செயற்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கூடிய அதிகாரங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அந்த வரிசையில் முதல் D.R.O  .திரு.இ.சிதம்பரப்பிள்ளை அவர்களும் பின்  AGA ஆக திரு.முருகவேள் அவர்களும் திரு.க.துரைராசா அவர்களும், திரு.பு.சுந்தரம் பிள்ளை அவர்கள்   AGA ஆக இருக்கும் போது DS என மாற்றம் பெற்று பிரதேச செயலர் எனவும் திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் 15 வருடங்கள் வரை கடமை ஆற்றினார். பின் 2003 காலப்பகுதியில் திரு. க.கேதீஸ்வரன்; அவர்கள் கடமை ஆற்றும் போது 2003 பிற்பகுதியிலிருந்து 2010 வரை திரு.செ.சிறினிவாசன் அவர்களும் 2010 ல் இருந்து திருமதி.அஞசலிதேவி சாந்தசீலன் அவர்களும் பிரதேச செயலராக செயலாற்றுகின்றார்கள்.
வரிசை 16:
தற்போது மீசாலைப் பகுதியானது காலத்தின் தேவைக்கு ஏற்ப பிரிப்புக்கள்  இணைப்புக்கள் செய்யப்பட்டு மீசாலை கிழக்கு-J/318, மீசாலை மேற்கு-J/319, மீசாலை  வடக்கு-J/321 கிராம அலுவலர் பிரிவுகளை  மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
 
== கல்வி வளர்ச்சி ==
கல்வி வளர்ச்சியின் பாதையில் ஆரம்ப காலத்தில் மீசாலைக்கிராமத்தில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம், மீசாலை அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை என மீசாலை கிராமத்தில் பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் சிறப்புமிக்கதாக அமைந்து வந்தது. அதை திரு.சி.கா.தம்பையா வாத்தியார் அவர்கள் அதிபராக வழிநடத்தி வந்தார். முன்பு மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையாக இருந்தது. தற்போது மாற்றம் பெற்று அந்த இடம் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலய ஆரம்பபாடசாலையாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்த திரு.தம்பிப்பிள்ளை அவர்கள் அன்றைய தமிழ் கலாசாரத்திற்கமைய வேட்டி சால்வை மட்டும் அணிந்து பாடசாலை சென்று கடமையாற்றி வந்தார். திரு. நடராசர் ஆசிரியர் அவர்கள் ஆசிரியராக கல்வி கற்பிப்பதோடு நாட்டு வைத்தியராகவும் சேவையாற்றி வந்தார். RCTMS பாடசாலையின் அதிபராக திரு.S.K. செல்லையா அவர்கள் கடமையாற்றி வந்தார். பின் ஐயாக்குட்டி மாணிக்கம் வாத்தியார் அவர்கள் கடமையாற்றினார். இது கேணியடி பாடசாலை எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
 
வரிசை 27:
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கக் கிளைகள் கிராமம் தோறும் அமைந்துள்ளது. மீசாலையின் மத்தியில் தபால் நிலையம்,புகையிரத நிலையம், மத்திய நூல் நிலையம் , பழ உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை நிலையம், என்பனவும் இலங்கையின் எந்தப்பகுதிக்கும் செல்லக்கூடிய முக்கிய பிரதான வீதியான A9 வீதி எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன்  பிரதான புகையிரத பாதையும் எமது கிராமத்தின் ஊடாக செல்கிறது. அத்துடன் புகையிரத நிலையமும் அமைந்துள்ளது.    மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் மையவாடி(மயானம்) அமைந்துள்ளது. கிராமங்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு கிராமங்கள் தோறும் மீசாலை வடக்கு , மீசாலை கிழக்கு, மீசாலை மேற்கு என் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு சனசமூகநிலையம் சுடர் ஒளி சனசமூகநிலையம் சிறீ முருகன்  சனசமூகநிலையம் மதுவன் வாசிகசாலை, வீனஸ் வாசிகசாலை என சனசமூகநிலையங்களும் மேலும் தாய் சேய் நிலையங்களும் அமைந்துள்ளது. கமநலச்சேவை நிலையமும் , கடந்த காலத்தில் ஓர் சந்தையானது மீசாலை புதுச்சந்தை என்ற பெயருடன் நடைபெற்று வந்தது. தும்புத்தொழிற்சாலையும் அமைந்திருந்தது. தற்போது மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் விற்பனை நிலையங்களும், தொழில் சார் நிலையங்களும் கொண்டதாக மீசாலைப் பகுதியானது அமைந்துள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு]]
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது