கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
1997 ஆம் ஆண்டிலிருந்து இக்கல்லூரியின் வளர்ச்சிப்போக்கு பல்வேறு துறைகளிலும் தீவிரம் அடைந்தது.பௌதீக வள அபிவிருத்தி,கல்வி விருத்தி, இணைபாடவிதான செயற்பாடுகள் விருத்தி என ஏற்பட்டது.இக்காலகட்டத்தில் வலயக்கல்வி அலுவலகத்தில்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வ.செல்வராசா,திருமதி.றெ.இருதயநாதன்,திருமதி.அ.வேதநாயகம் ஆகியோர் கல்லூரியின் தேவைகளை உணர்ந்து ஏற்ற அபிவிருத்திகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்த திரு.கு.பிறேமகாந்தன் அவர்கள் இக்கல்லூரியின் நீண்ட கால வரலாற்றினை தெரிந்து கொண்டவர் என்பதால் இக்கல்லூரியின் வளர்ச்சியில் இடையறாத அக்கறையுடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கு கல்லூரி அபிவிருத்திச் சபையினரும்,பழைய மாணவர்களும்,கொடிகாமம் வர்த்தகர்களும்,முன்னின்று உழைப்பதைக் காணலாம்.திரு.திருமதிதம்பு.கந்தையா அதிபர் காலத்தில் பிரதி அதிபர்களாக கடமையாற்றிய திரு.க.அம்பிகைபாகன்,திரு.சி.குலசேகரம்,திருமதி.செ.ஜெகநாதன் ஆகியோர் விசுவாசமாகவும்,உறுதுணையாகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.பகுதித் தலைவர்களாக திரு.வை.மனோகரன்,திரு.வி.இராசநாயகம் ஆகியோர் கடமை புரிந்தனர்.எக்கஷ்டம் வரினும் திரு.தம்பு.கந்தையா அதிபருடன் தாமும் அதில் பங்காளிகள் ஆகவும் இயங்கி நிர்வாகத்தைச் சிறப்புற நடாத்தியமை பாராட்டுக்குரியதாகும்.
 
[[படிமம்:2008 அதிபர் திரு.திருமதி.கந்தையா அவரது இல்லத்தில் இருந்து கல்லூரி சமூகத்தால் அழைத்து வரு.jpg|200px|thumb|இடது|2008 அதிபர் திரு.திருமதி.கந்தையா அவரது இல்லத்தில் இருந்து கல்லூரி சமூகத்தால் அழைத்து வரும் போது]]