மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Uzi83 (பேச்சு | பங்களிப்புகள்)
Uzi83 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலி படையல் இட்டு வந்த மக்கள் தொடக்கத்தில் இருந்தே மதுரை வீரனுக்கும் அப்படியே படையல் இட்டு வந்தனர். அது வாழையடி வாழையாகி இப்பொழுது அதுவே வழக்கமாகி விட்டது. உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு. நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம். பூஜை நேரத்தின் போது அமைதியான மனதிற்க்கு இதமான மெல்லிசையை சேர்த்து கொள்ளலாம். இல்லவழிப்பாட்டிற்கோ ஆலயவழிப்பாட்டிற்கோ முன்னதாக தாம் பூஜை செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ, நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில் ஆழமாக பதிபதிந்து கொள்ளவேண்டும். பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும் மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு "என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும். சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை ஆகும்.சுருங்க கூரின் நாம் நம் தாய்க்கோ தந்தைக்கோ கால் பிடித்து விட்டால் எவ்வளவு அன்பாக செய்வோம். நம் நாட்டு ஜனாதிபதிக்கு எடுபிடி வேளை செய்தால் நாம் எவ்வளவு மரியாதையுடனும் கவனத்துடனும் செய்வோம். எல்லாம் முடிந்து அவர் நமக்கு பதக்கம் குத்தி விட்ட பின்பு நாம் எவ்வளவு அடக்கமாக பணிவாக கூனி குறுகி பின் நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விடை பெறுவாம். அதே அன்பும் மரியாதையும்தான் பக்தியின்(பூஜையின்) போது நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
 
===எண்ணவழிப்பாடு====
 
முதலில் நாம் ஸ்ரீ வீரனை நேசிக்க பழகி கொள்ள வேண்டும். நாம் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அவரோடு பேசுவது போன்று விளையாடுவது போன்று நம் எண்ணங்களால் அவரோடு உறவாட வேண்டும். அல்லது அவருடைய சரித்திரத்தை படித்து அதில் அவர் செய்யும் வீர சாகசங்களை அவருடைய பெருமைகளை நாம் நமது எண்ணத்திரையில் ஒரு திரைப்படத்தை போல் காணவேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது