வானூர்தியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
=== ஊதுபை பறத்தல் ===
[[படிமம்:Flying_boat.png|வலது|thumb|பிரான்செஸ்கோ லானா தா தெர்சியின் பறக்கும் படகு கருத்தாக்கம் c.1670]]
17ஆம் நூற்றாண்டில் காற்றுக்கும் எடை உண்டு என்று நிரூபித்த [[கலீலியோ கலிலி]]<nowiki/>யின் ஆய்வுகளிலிருந்து நவீனயுக காற்றை-விட-இலேசான பறத்தல் ஆய்வுகள் ஆரம்பித்தது எனலாம். 1650 ஆண்டுவாக்கில் "சைரனொ தெ பெர்கராச்" தனது புதினங்களில் காற்றைவிட இலேசான ஒரு பொருள் மூலம் வளிமண்டலத்தில் உயர்வது போலவும் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் வெளியேற்றத்தின் மூலம் கீழிறங்குவதாகவும் விவரித்தார்.{{sfn|Ege|1973|p=6}} "பிரான்செஸ்கோ லானா தா தெர்சி" (Francesco Lana de Terzi) கடல்மட்டத்தில் காற்றழுத்தத்தை அளந்ததுடன், 1670-ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவியல்பூர்வமாக செயல்படக்கூடும் பறத்தல் தத்துவத்தை முன்வைத்தார். அவர் உள்ளிருக்கும் காற்று முழுவதும் வெளியேற்றப்பட்ட உலோகக் கோளங்களை தனது கருதுகோளில் பயன்படுத்தினார்; அவரது கருத்தின்படி அத்தகைய, காற்றுவெளியேற்றப்பட்ட, உலோகக் கோளங்கள் வான்கப்பல்களை காற்றில் தக்கவைக்கும் என்பதாகும். அவர் முன்வைத்த கருதுகோள்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அதாவது, மேலும் உயரே செல்ல எடைப்பாரங்களை வெளியேற்றுவது மற்றும் உயரத்தைக் குறைக்க ஏற்றம் தரும் கொள்கலனிலிருந்து காற்றை வெளியேற்றுவது.{{sfn|Ege|1973|p=7}} ஆனால் நடைமுறையில், தெ தெர்சியின் கோளங்கள் புறக்காற்றின் அழுத்தத்தில் குலைந்திருக்கும். நடைமுறையில் பயன்படுத்தப்படக்கூடிய ஏற்றம் தரும் பறத்தலுக்கான இயந்திரங்களை செயல்படுத்த அறிவியல் / பொறியியல் முன்னேற்றங்கள் நிகழவேண்டியிருந்தது.
[[File:Montgolfier brothers flight.jpg|thumb|மான்ட்கொல்ஃபியர் சகோதரர்களின் ஊதுபை பறப்பு, 1784]]
 
18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஃபிரான்சின் "மான்ட்கொல்ஃபியர் சகோதரர்கள்" (Montgolfier brothers) ஊதுபை பறத்தல்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களது ஊதுபைகள் காகிதத்தால் செய்யப்பட்டவையாயிருந்தன. [[நீராவி]]யை ஏற்றம்-தரும்-வாயுவாகப் பயன்படுத்திய அவர்களது ஆரம்பகால ஆய்வுகள் பெரும் தோல்வியில் முடிந்தன. புகையை நீராவியின் ஒரு வகை என்று தவறாகக் கருதிய இவர்கள், சூடான புகையை தமது ஊதுபைககளில் நிரப்பி பறத்தலில் சில வெற்றிகள் கண்டனர். 1783-ஆம் ஆண்டில் "பிரெஞ்சு அறிவியல் கழகத்தில்" செயல்விளக்கம்தர அழைக்கப்பட்டனர்.
 
[[ஐதரசன்]] கண்டுபிடிப்பிற்குப் பின்னர், 1780-ஆம் ஆண்டுவாக்கில் "ஜோசப் பிளாக்" (Joseph Black) எனும் அறிவியலாளர் ஐதரசனை ஏற்றம்-தரும்-வாயுவாகப் பயன்படுத்தும் கருத்தினை முன்வைத்தார்; ஆயினும், செயல்பாட்டில் இத்திட்டத்தினைக் கொண்டுவர ஐதரசன் வாயு வெளியாக வண்ணம் அடைத்துவைக்கக்கூடியதாகவும் இலகுவாகவும் இருக்கும் பொருட்கள் மேம்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் மான்ட்கொல்ஃபியர் சகோதரர்களின் ஊதுபை பறத்தல் செயல்விளக்கத்திற்குப் பின்னர், அக்கழகத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான ஜாக் சார்லசு (Jacques Charles) என்பவர் ஐதரசன் வாயுவைப் பயன்படுத்திப் பறத்தலை செயல்படுத்திக்காட்டத் தயாரானார். சார்லசும் உதவியாளர்களான இராபர்ட் சகோதரர்களும் ஐதரசன் வாயு வெளியாகாவண்ணம் தாங்கக்கூடிய மீள்ம-பட்டுறையை உருவாக்கினர். வேதிவினைமூலம் ஐதரசனை உருவாக்கி உறையில் வாயுவை நிரப்பும் நேரத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.
வரிசை 38:
மான்ட்கொல்ஃபியர் ஊதுபைகளுக்கு சில குறைபாடுகள் இருந்தன; முக்கியமாக, அவற்றால் வெயில் / காய்ந்த வானிலையில் மட்டுமே பறக்க இயலும், மேலும் எரிதலிலிருந்து வெளிப்படும் சிறு பொறிகளால்கூட காகிதத்தாலான ஊதுபைகள் தீப்பற்றிக்கொள்ளக்கூடும். ஆட்கள் செல்லுமாறு பின்னர் வடிவமைக்கப்பட்ட ஊதுபைகளில், அடிப்பாகத்தில் இருக்கும் கூடைகள் ஆட்களைச் சுமக்குமாறு கூடுதலாக கீழிறக்கி வடிவமைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் ஊதுபைகள் தீப்பற்றும் அபாயம் சற்றே குறைந்தாலும், அவற்றில் பறந்த தெ ரொசியெர் மற்றும் தெ அர்லாண்டெசு ஆகியோர் தீப்பற்றுதலைத் தவிர்க்கவும் தீப்பற்றினால் அணைக்கவும் இரு கூடைகளில் நீரும் துடைக்க நுரைப்பஞ்சும் எடுத்துச் சென்றனர். மறுமுனையில், மான்ட்கொல்ஃபியரின் ஊதுபைகளுடன் ஒப்பிடும்போது சார்லசின் ஆள்சுமக்கும் ஊதுபைகள் நவீனமானவை. {{sfn|Ege|1973|pp=97–100}} இத்தகைய செயல்பாடு / வேறுபாடுகளால், சுடுகாற்று-ஊதுபைகள் "மான்ட்கொல்ஃபியர் வகை" (Montgolfière type) எனவும் ஐதரசன்-ஊதுபைகள் "சார்லசு வகை" (Charlière) எனவும் அழைக்கப்பட்டன.
 
சார்லசு மற்றும் ராபர்ட் சகோதரர்களின் அடுத்த ஊதுபையும் "சார்லியர் வகை"யினதாகும், அதற்கு "லா கரொலின்" (La Caroline) எனப் பெயரிடப்பட்டது. அது ழான் பாப்டிஸ்ட் மியூஸ்னியரின் ( Jean Baptiste Meusnier) செலுத்தப்படக்கூடிய மற்றும் நீட்டக்கூடிய ஊதுபை கருதுகோளை ஒட்டி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் வெளிப்புறத்தில் ஒரு பெரிய ஊதுபையும் அதையொட்டியவாறே உள்புறமாக வாயுவைக் கொண்டிருக்கும் மற்றொரு ஊதுபை இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். செப்டம்பர் 19, 1784 அன்று [[பாரிஸ்|பாரீசு]]க்கும் பியூவ்ரி நகருக்கும் இடைப்பட்ட 100 கி.மீ.க்கும் மேலான தூரத்தை இந்த ஊதுபை பறத்தலில் கடந்தனர்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது