வாரணம் ஆயிரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
அப்பா கிருஷ்ணன் (சூர்யா) ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், அம்மா மாலினி (சிம்ரன்), தங்கை என உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த நாயகன் சூர்யா (சூர்யா), திருச்சி பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அப்பா செல்லம். வகுப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா பார்த்தபடி ஊரைச் சுற்றிப் பொழுதைக் கழிக்கிறார்.
 
ஒரு திடீர் தருணத்தில் மேக்னா (சமீரா) என்ற தேவதையை போன்ற ஒரு பெண்ணை ரயிலில் சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பேச்சுவாக்கில் அவர் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படிக்கப்போவதைத் தெரிந்து கொள்கிறார். நிச்சயம் உன் வாழ்க்கையில் நான் வந்தே தீருவேன், என கூறுபவர் அதைச் செய்தும் காட்டுகிறார். ஆனால் எதிர்பாராத விபத்தில் சமீராவைப் பறிகொடுத்து, பித்துப் பிடித்து அலையும் சூர்யாவை அப்பாவும் அம்மாவும்தான் மீண்டும் மனிதனாக மாற்றுகிறார்கள்.
 
அந்த நேரத்தில் சூர்யா வாழ்க்கையில் ப்ரியா (திவ்யா ) நுழைகிறாள், சூர்யா ராணுவ அதிகாரியாகிறான்... எல்லாமே தந்தையின் வழிகாட்டுதல்களுடன். தந்தை ஒரு நாள் மரணத்தைத் தழுவுகிறார்... சூர்யாவின் உலகம் முடிவுறுகிறது. ஆனால், அதன் பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார் அம்மா.
"https://ta.wikipedia.org/wiki/வாரணம்_ஆயிரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது