முதலாம் நரசிம்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
புகழ் பெற்ற [[பல்லவர்|பல்லவ]] மன்னனான [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|மகேந்திர வர்மனுக்குப்]] பின்னர் அவன் மகன் '''நரசிம்மவர்மன்''' (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய [[சாளுக்கியர்|சாளுக்கியரை]] வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். இதன் மூலம் ''மாமல்லன்'' என்ற பட்டப் பெயரையும் பெற்றுக்கொண்டான். [[அரசியல்]], [[கலை]] போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.
 
'''சாளுக்கியர்களுடன் போர்'''
 
கி.பி.642ல் நரசிம்மவர்மன் தனது படைத் தளபதி பரஞ்சோதி (விக்ரம கேசரி) உடன் வாதாபி நகரில் புகழ் பெற்ற சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை கொன்று வெற்றி கொண்டான். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.
இவனது தளபதி பரஞ்சோதி சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
 
 
 
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_நரசிம்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது