ஆர். நடராஜ முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
[[தாதாசாகெப் பால்கே]]யின் திரைப்படங்களைப் பார்த்து அதன் மூலம் அசையும் திரைப்படங்கள் மீது ஆர்வம் காட்டினார் நடராஜ முதலியார். அப்போதைய ஆளுநராகவும், வைசிராயாகவும் பணியாற்றிய [[கர்சன் பிரபு]] குறித்த வர்ணனைத் திரைப்படம் ஒன்றை பிரித்தானியத் திரைப்படத்துறையினர் தயாரித்து வந்தனர்.<ref name=hindu1/> அவர்களில் ஸ்டுவர்ட் சிமித் என்னும் ஒளிப்பதிவாளருடன் முதலியாருக்கு அறிமுகம் கிடைத்தது. அவரிடம் இருத்து திரைப்படங்கள் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டார்.<ref name=hindu1/> திரைப்படத் தொழிலில் ஆர்வம் ஏற்பட்டதன் விளைவாக தனது கம்பனியை சென்னை சிம்சன் கம்பனிக்கு விற்று விட்டு,<ref name=vikatan>{{cite web|url=http://www.vikatan.com/news/coverstory/50790.art|title=Tamil cinema pioneers: R.Natarja mudaliyar, first tamil producer of silence film in south india - தமிழ் சினிமா முன்னோடிகள் (4): ஆர். நடராஜ முதலியார்|work=www.vikatan.com|accessdate=30 அக்டோபர் 2016}}</ref> 1917 ஆம் ஆன்டில் "இந்தியா பிலிம் கம்பனி" என்ற பெயரில் சொந்தக் கம்பனி ஒன்றை ஆரம்பித்தார்.<ref name=hindu1/><ref name="Srivastava2008">{{cite book|author=Edited By Jerry Pinto & Rahul Srivastava|title=Talk of the Town|url=https://books.google.com/books?id=Az1XFhjzmUwC|accessdate=5 June 2013|year=2008|publisher=Penguin Books India|isbn=978-0-14-333013-4|pages=42–43}}</ref> சென்னை [[புரசைவாக்கம்]], மில்லர்சு சாலையில் தென்ன்னிந்தியாவின் முதலாவது கலையகத்தை அமைத்தார்.<ref name="Srivastava2008"/>
 
1917 இல் ''[[கீசக வதம்]]'' என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இதன் ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு போன்ற பொறுப்புகளிலும் அவரே பணியாற்றினார். 6,000 அடிகளுக்கும் மேல் நீளமுள்ள இத்திரைப்படமே [[தென்னிந்தியா]]வில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகும்.<ref name="Cameron2011">{{cite book|author=Samuel Cameron|title=Handbook on the Economics of Leisure|url=https://books.google.com/books?id=gWuMYKzvnOEC|accessdate=5 June 2013|date=1 சனவரி 2011|publisher=Edward Elgar Publishing|isbn=978-0-85793-056-9|page=302}}</ref><ref name=hindu2>{{cite news|title=The stamp of honour|url=http://www.hindu.com/2000/07/10/stories/09100224.htm|accessdate=5 சூன் 2013|newspaper=[[தி இந்து]]|date=10 சூலை 2000}}</ref> இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.<ref name=hindu2/> இத்திரைப்படத்தின் குறிப்புகளை மருத்துவர் குருசுவாமி முதலியாரும், திருவேங்கட முதலியாரும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதினர்.<ref name=hindu2/> [[இந்தி]] மொழிக் குறிப்புகளை [[தேவதாஸ் காந்தி]] எழுதினார்.<ref name=hindu2/> கீசகவதம் திரைப்படம் 1918 ஆம் ஆண்டு துவக்கத்தில் சென்னையில் எல்பின்ஸ்டன் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, மேலும் சில திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
 
1923 ஆம் ஆண்டு முதலியாரின் திரைப்படக் கலையகம் தீக்கிரையானது.<ref name=vikatan/> அதே ஆண்டு அவருடைய மகனும் இறந்தார். பின்னர் முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்காததாலும், திரைப்படத் தொழிலை விட்டு விலகினார்<ref name=hindu2/>
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._நடராஜ_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது