பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
===மலைப்பண்டாரம்===
மலைப்பண்டாரம் என்னும் குலப்பிரிவும் உள்ளது. இவர்கள் சைவசமயத்தின் மீதோ தமிழின் மீதோ தாகம் கொண்டவர்களல்லர். இவர்கள் காட்டில் எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். மலையாளத்திற்கு நெருக்கமான மொழியையே பேசுகிறார்கள். காட்டுக்குகை, மரக்கூட்டம், பாறையிடுக்கு இவற்றை வாழ்விடமாகக் கொண்டவர்கள். காட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு பண்டமாற்றம் செய்து வாழ்பவர்கள்.
===தென்மாவட்டங்களில் பழக்கம்===
முருகனுக்கு மிகவும் உகந்ததான ‘காவடியை’ எடுக்கும்போது அதைத் தோள்மீது ஏற்றிவைக்க ‘பண்டாரம்’ கிடைத்தலே நன்மை என்னும் நம்பிக்கை தென்மாவட்டங்களில் பலமாக உள்ளது. சஷ்டிக் காலங்களில் அதுவும் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் அங்கப் பிரதட்சணம் செய்த பிறகு பண்டாரம் கையால் விபூதி தரிப்பதை மிகவும் நன்மை என்றும் அவர்களுக்காகவே காத்திருப்பவர்களையும் காணலாம்.
பண்டாரங்களை ஒன்று அல்லது மூன்று அல்லது ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கழைத்து வந்து தலைவாழையிலை முன்பு அமரவைக்கிறார்கள். பண்டாரங்கள் தங்கள் கையோடு கொண்டுவரும் சங்கை ஊதி (சங்கு ஊதுவதை சங்கு பெருக்குவது என்று குறிப்பிடுகிறார்கள்) முருகன் பாடல்களைப் பாடித்துதித்த பின்பு தலை வாழையிலையில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவைப் புசிக்கிறார்கள். அவர்களை அவ்வாறு வயிறார உண்ணவைத்தால் அதுவரை சேர்ந்திருந்த பாவங்கள் அனைத்தும் உடனடியாக முருகனருளால் தொலையும் என்பது ஐதீகம். இது தென்மாவட்டங்களில் இன்றும் செல்வாக்குடன் இருக்கும் பழக்கம்.
 
==மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது