கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *சிறு திருத்தம்*
வரிசை 5:
 
==வரலாறு==
===பாடசாலைக் கீதம்===
இயற்றியவர்: [[சி.சரவணபவன்]](சிற்பி)
 
வரிசை 29:
:தந்திடும் தாயே வாழ்க. (திரு)
 
=== பாடசாலைச் சின்னம் ===
எந்த ஒரு நிறுவன அமைப்பும் தமது எண்ணங்களை வளர்ப்பதற்கும் தமது செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும் சின்னங்களைப் பயன்படுத்துகின்றன.இவ் வகையில் எமது பாடசாலைச் சின்னமும் மாணவர்களின் இலட்சியத்தை வரிந்து ஒன்று திரட்டப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.எமது பாடசாலையின் அமரர்.பொன்.கந்தையனார் அதிபராக இருந்த 1971-1976 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் திருநாவுக்கரசு நாயனாரின் திருவுருவத்தை தாங்கியதாகவே பாடசாலைச் சின்னம் அமைந்திருந்தது.பின்னர் திரு.க.பேரம்பலம் அவர்கள் அதிபராக இருந்த 1976-1987 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே தற்போது உள்ள சின்னம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இச் சின்னத்தில் காணப்படும் '''கற்றாங்கு ஒழுகுக''' என்ற மகுட வாசகம் கற்றபடி ஒழுகுதல் வேண்டுமென்ற கல்விச் சிந்தனையை இலட்சியமாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இரண்டு புறமும் அமைந்துள்ள நட்சத்திரக்குறியீடு மகுட வாசகத்தின் உயரிய சிந்தனையை வெளிக்கொணர்கிறது.உள்ளே அமைந்துள்ள மூனு்று கோடுகளும் பாடசாலையில் உள்ள மூன்று இல்லங்களையும் எடுத்தியம்புகின்றன.கல்விச் சுடர் ஏற்றுகின்ற தெய்வச் சக்தியான சரஸ்வதியின் உருவப்படம் இலட்சியத்தின் மையப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.ஒளி விட்டுப் பிரககசிக்கும் தீப ஒளி பாடசாலையின் இலட்சியத்தை எட்டுத்திக்கும் ஒளிபெறச் செய்யும் செந்தீயாக வளர்ந்து காணப்படுகிறது.மேலும் அதற்கு மெருகூட்டுகின்ற வகையில் இரு புறத்தையம் தொட்டால் போன்று நெல் மணிகள் நிறைந்த இரண்டு நெற்கதிர்கள் ஆராத்தி எடுப்பது போன்று அமைந்து காணப்படுவது பாடசாலையில் பெறவேண்டிய இறுதிப்பயனாகிய கல்விப்பயனை மாணவர்கள் முழுமையாக அடைய வேண்டுமென்ற கருத்தினைத் தாங்கி நிற்கின்றது.கலைத்தெய்வத்தின் செம்மையான பாதாரவிந்தங்களில் காணப்படுகின்ற அழகிய திருஏடு உலகில் பெற வேண்டிய கலைகள் அனைத்தையும் பெறகின்ற இடம் பாடசாலை என்பதை உணர்த்துகின்றது.
வரிசை 35:
இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று தெய்வச் சக்தியான சரஸ்வதியையும் ஏனைய விடயங்களையும் உள்ளடக்கி வெளியே வரையப்பட்டுள்ள விளிம்பானது பாடசாலைக்கு அணித்தாக அயற்சமூகத்தை பாடசாலையுடன் இணைத்து பிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்து இருப்பதை எடுத்தியம்புகின்றது.
 
=== பாடசாலைக் கொடி ===
 
பாடசாலைக் கொடி மாணவர்கள் பெற வேண்டிய நற்பெறுபேற்றின் சின்னமாக விளங்குகின்றது.பாடசாலையின் புதிய வளர்ச்சிப்படியில் மைற்கல்லாக பாடசாலைக்குரிய கொடியினை தேர்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக 1971-1976 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலைக் கொடி உருவாக்கப்பட்டது.இக் கொடியில் சிவப்பு,நீலம்,பச்சை ஆகிய மூன்று நிறங்கள் சம அளவில் வகுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.இக் கல்லூரிக் கொடியைப் பிரதி பலித்துக் காட்டுகின்ற ஒவ்வொரு வர்ணமும் ஆழமான பொருளினை வெளிக் கொணர்வதாக அமைகின்றது.
வரிசை 45:
மனித வாழ்வியலில் நீலவர்ணம் பிரித்து பார்க்க முடியகத ஒன்றாகும். எம்மைச் சூழு்ந்திருக்கின்ற பரந்தபரவையும் அதற்கு மேல் கவிந்திருக்கின்ற காற்று உலா வருகின்ற விண்வெளியும் நீலவர்ணத்தால் அழகுபடுத்தப்பட்டு இருக்கின்றது.மனிதன் உயரிய மனிதனாக மாற்றப்பட வேண்டுமானால் கடல் போல் நீர்மையும் ,விண்போல் பரந்த உள்ளமும், பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும்.இந்த மகோன்னதமான சிந்தனையை வெளிப்படுத்தவதாக நீலநிறம் அமைந்துள்ளது.இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட பாடசாலைக் கொடியை பிரதிபலிப்பதாகவே எமது இல்லங்களுக்குரிய கொடிகளும் அமைந்துள்ளது.
 
=== கல்லூரியின் வளர்ச்சி ===
1925 ஆம் ஆண்டு வே.அருணாசலம் என்பவர் திருநாவுக்கரசு நாயனார் மடாலயம் ஒன்றை நிறுவினார்.இன்று இப்பாடசாலையின் நினைவுச்சின்னங்களில் ஒன்றான மடாலயமாக விளங்கிய பழைய மண்டபம் எனப்படும் கட்டிடம் 1924 ல் கட்டப்பட்டது.<ref> 2003 ஆண்டு வெளியிடப்பட்ட பவள விழா மலர்ப் புத்தகம் </ref>
 
வரிசை 107:
திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் முன்னாள் அதிபர் திரு.த.கந்தையா ,யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட பதிவாளர் திரு. ந. இராசவிசாகன் ஆகியோரின் அணுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட ”கந்தையா புலமைப்பரிசில் நிதியம்” மாணவரை ஊக்குவிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது கல்லூரியின் சிறப்பாகும். இக்கல்லூரியின் வளாகத்தை அழகூட்டும் வகையில் திரு.வ.நடராசா அதிபர் காலத்தில் சரஸ்வதி சிலையுடன் கூடிய தடாகம் ஒன்று அமைக்கப்பட்டது. இப் பணியில் கல்லூரியின் பழைய மாணவன் திரு.து.குமரநாதன் அவர்கள் சரஸ்வதி சிலையை இலவசமாக வடிவமைத்து கொடுத்துள்ளமை பாராட்டுக்குரியது.
 
=== கல்லூரியின் பழைய மாணவர்கள்===
திரு.க.பேரம்பலம் அதிபர் காலத்தில் 1985 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் ஏறக்குறைய இரு தசாப்தங்களாக கல்லூரி வளர்ச்சியில் அரும்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.இச் சங்கத்தின் 1993 அதிபர்.திரு.தம்பு.கந்தையா காலப்பகுதியில் கல்லூரி மைதானத்தை புனரமைத்துக் கொடுத்தமை,பாடசாலைக் காணிக் கொள்வனவிற்குநாடக விழா மூலம் ஒரு பகுதி நிதியை சேகரித்துக் கொடுத்தமை,பாடசாலை புனர்நிர்மான வேலைகளில் பங்காளராக செயற்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
 
வரிசை 114:
திரு.குமாரசாமி.ரவீந்திரன் அதிபர் காலத்தில் திரு.ம.சசிகரன் அவர்கள் செயலாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார்.
 
=== கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம்===
1971 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லூரி அபிவிருத்திச் சங்கம் கல்லூரி வளர்ச்சியில் கூடுதலான பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அவ்வகையில் மக்கள் மண்டபம் 1,மக்கள் மண்டபம் 2 ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தமை,பாடசாலை அரங்குக்குரிய கூரைத்தகடு தவிர்ந்த ஏனைய செலவுகளை வழங்கியமை,G.T.Z உதவியுடன் அமைக்கப்பட்ட மேல்மாடிக்கட்டிடத்திற்குரிய கூலிச் செலவுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை என்பனவற்றை விசேடமாக குறிப்பிடலாம்.
 
=== கொடிகாமம் வணிகர் மன்றம் ===
அன்றிலிருந்து இன்றுவரை கல்லூரியின் வளர்ச்சியில் கொடிகாமம் வணிக மன்றத்தின் பங்களிப்பும் முக்கிய இடத்தை பெறுகின்றது. கல்லூரியுடைய காணிக் கொள்வனவிற்கு ஒரு பகுதி நிதியை வழங்கி உதவியமை,கல்லுாரியில் தண்ணீர்த்தாங்கி அமைத்துக் கொடுத்தமை,வருடந்தோறும் இல்ல விளையாட்டுப்போட்டிக்கு பரிசில்களை தாராளமாக மனமுவந்து வழங்கி வருதல் போன்றவற்றை கல்லூரி வளர்ச்சிக்காக மனமகிழ்வுடன் செய்து வருகின்றனர்.
 
=== புலம்பெயர் காலங்களும் ஆவணக்காப்பும் ===
தென்மராட்சியில் உள்ள பாடசாலைகள் போர்ச்சூழல்கள் ஏற்படும் போது புலம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்ந்தமை வரலாற்றுப் பதிவுகளாகும்.கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி ஒரு கேந்திர மையத்தில் இருப்பதால் அடிக்கடி பல்வேறு வகையான இடையூறுகளையும் எதிர்கொண்டு வந்தது.இராணுவ நடவடிக்கைகளின் போது பல தடவைகள் இராணுவ முகாமாக,காவலரன்களாக இது விளங்கியிருக்கிறது.