உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 3:
[[படிமம்:Piles of Salt Salar de Uyuni Bolivia Luca Galuzzi 2006 a.jpg|thumb|right|[[பொலிவியா]]வில் உப்பு மலைகள்]]
 
'''உப்பு''' (''Salt'') என்பது உணவில் பயன்படும் ஒரு [[கனிமம்|கனிமமும்]], [[விலங்கு]]களின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது [[சோடியம் குளோரைடு]] என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு 'NaCl' என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால்,சமையல் உப்பு [[தாவரம்|தாவரங்களுக்கு]] நஞ்சு சார்ந்தது ஆகும்.
 
மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகள் ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.
 
சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன.[[உருமேனியா]] நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர்.சீனாவிலும் இதே காலகட்டத்தில் உப்பு-உற்பத்திப் பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைய எபிரெயர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வணிகத்தில் உப்பு முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. மத்தியதரைக் கடல் முழுவதும் படகு மூலம் சிறப்பாக கட்டப்பட்ட உப்பு சாலைகளிலும், மற்றும் ஒட்டக வணிகர்கள் மூலம் சகாரா முழுவதற்கும் உப்பு கொண்டு செல்லப்பட்டது. உப்புக்கான பற்றாக்குறை மற்றும் உலகளாவிய தேவையை முன்னிட்டு நாடுகளுக்கு எதிராக போர்கள் நடைபெற்றன. உப்பின் மீதான வரி வருவாய் உயர்த்தப்பட்டது. மத விழாக்களிலும் பிற கலாச்சார நிகழ்வுகளிலும் உப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது.
 
உப்பு சுரங்கங்களிலிருந்து உப்பு தோண்டி எடுக்கப்படுகிறது. அல்லது கடல்நீரை ஆவியாக்கி உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. எரி சோடாவும் [[குளோரின்|குளோரினும்]] இதன் முக்கிய தொழில்துறை தயாரிப்புகள் ஆகும்.மேலும் பாலிவினால் குளோரைடு, நெகிழிகள், காகித கூழ் மற்றும் பல பிற பொருட்கள் தயாரிக்க இது உதவுகிறது. ஆண்டுக்கு சுமார் இருநூறு மில்லியன் டன் உப்பின் உலகளாவிய உற்பத்தியில், சுமார் 6% உப்பே மனித நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. நீர் சீரமைப்பு நடவடிக்கைகள், விவசாய பயன்பாடு போன்ற பிற செயல்பாடுகளுக்கு எஞ்சிய உப்பு பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கக இது கடல் உப்பு மற்றும் மேசை உப்பு என்ற வடிவங்களில் விற்கப்படுகிறது, உடலில் அயோடின் குறைபாட்டை நீக்க அயோடின்சேர்த்த உப்பு சமையலில் பயன்படுத்தப்படுகிறது. உணவைப் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.
 
மின்பகுளி மற்றும் சவ்வூடுபரவலுக்குரிய கரைபொருள் போன்ற தன்மைகளால் சோடியம் மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகிறதுஅதிகப்படியான உப்பு நுகர்வு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்றவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்கச் செய்கிறது.உப்பின் சுகாதார விளைவுகளை நீண்ட ஆய்வுகள் செய்த பல உலக சுகாதார அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள் உப்பு உணவுகளின் நுகர்வை குழந்தைகளும் பெரியவர்களும் குறைக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றனர் பெரியவர்கள் 2,000 மி.கி. அதாவது 5 கிராம் சோடியத்துக்கும் குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது <ref>{{Cite web |title=WHO issues new guidance on dietary salt and potassium |url=http://www.who.int/mediacentre/news/notes/2013/salt_potassium_20130131/en/ |date=31 January 2013 |publisher=[[உலக சுகாதார அமைப்பு|WHO]]}}</ref>.
வரிசை 27:
== உப்பின் வேதியியல் ==
 
பெரும்பாலும் உப்பு என்று சொல்லப்படுவது சோடியம் குளோரைடு என்ற வேதிச்சேர்மத்தையே ஆகும். இந்த அயனிச் சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு NaCl. [[சோடியம்|சோடியமும்]] [[குளோரின்|குளோரினும்]] சம அளவில் கலந்து சோடியம் குளோரைடு உருவாகியிருப்பதை இச்சமன்பாடு காட்டுகிறது. வரலாற்றுக்கு முந்தைய கடல் உப்புகளிலும், புதியதாக உருவாக்கப்படும் உப்புகளிலும் அரிய தனிமங்கள் சிறிய அளவில் காணப்பட்டன. இத்தகைய உப்புகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கின்றன. தோண்டியெடுக்கப்படும் உப்பு மேசை உப்பு தயாரிப்பதற்காக சுத்திகரிக்கப்படுகிறது. தண்ணீரில் கரைக்கப்படும் இவ்வுப்பு கரைசலாக்கப்பட்டு இதிலிருந்து பிற கனிமங்கள் வடிகட்டல் முறையில் நீக்கப்படுகின்றன. பின்னர் மீள ஆவியாக்கப்படுகின்றன. இச்செயல்முறையின் போது உப்புடன் அயோடினேற்றம் செய்யப்படுகிறது. உப்புப் படிகங்கள் ஒளி ஊடுறுவும் தன்மையும் கனசதுர வடிவம் கொண்டும் காணப்படுகின்றன, தூய்மையான உப்பு வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. ஆனால் மாசுக்கள் சேர்ந்தால் இவ்வுப்பு நீலம் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.
 
உப்பின் மோலார் நிறை 58.443 கி/மோல், உருகுநிலை 801 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் கொதிநிலை 1,465 °செல்சியசு வெப்பநிலை ஆகும். (2,669 °F). உப்பின் அடர்த்தி கனசென்டிமீட்டருக்கு 2.17 கிராம்கள் ஆகும். இது நீரில் நன்றாகக் கரைகிறது. அவ்வாறு கரையும் போது Na+ மற்றும் Cl− அயனிகளாக உப்பு பிரிகிறது. மேலும் உப்பின் கரைதிறன் லிட்டருக்கு 359 கிராம்கள் என அளவிடப்பட்டுள்ளது. குளிர் கரைசல்களில் உப்பு இருநீரேற்றாக (NaCl•2H2O.)படிகமாகிறது<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/519712/salt-NaCl |title=Salt (NaCl) |last1=Wood |first1=Frank Osborne |last2=Ralston |first2=Robert H. |work=Encyclopædia Britannica |accessdate=16 October 2013}}</ref>. சோடியம் குளோரைடின் கரைசல்கள் தூய்மையான நீரிலிருந்து மாறுபட்டு வெவ்வேறு மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருக்கின்றன. 23.31 எடை சதவீத உப்பின் உறைநிலை −21.12 °செல்சியசு, வெப்பநிலை என்றும் நிறைவுற்ற உப்பு கரைசலின் கொதிநிலை சுமாராக 108.7° செல்சியசு வெப்பநிலையாகவும் உள்ளது<ref name=u1>Elvers, B. ''et al.'' (ed.) (1991) Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 5th ed. Vol. A24, Wiley, p. 319, ISBN 978-3-527-20124-2.</ref>.
 
== உற்பத்தி ==
வரிசை 56:
== உப்பு வகைகள் ==
உப்புகள் பொதுவாக அமிலமும் காரமும் ஒன்றுக்கொன்று நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு பெறப்படுகிறது. இந்த வினையின் நிகழ்வுத்தன்மையைப் பொறுத்து அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு மற்றும் அணைவு உப்பு ஆகியவைகள் கிடைக்கப் பெறுகின்றன.
 
== உப்பின் பயன்கள் ==
* உணவிற்கு சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது.
வரி 66 ⟶ 67:
 
== உசாத்துணை ==
{{Reflist|2}}
இளையர் [[அறிவியல்]] [[களஞ்சியம்]]. மணவை முஸ்தபா. -மணவை பப்ளிகேஷன் வெளியீடு-1995
 
== வெளி இணைப்புகள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflistportal|Food}}
{{Sister project links|wikt=salt|commons=Salt|b=Cookbook:Salt|s=Littell's Living Age/Volume 4/Issue 34/Salt in Abyssinia|v=Extra info on food consumption#Salt/potassium intake|n=no|q=no}}
*[http://www.hagley.org/librarynews/introducing-carol-litchfield-collection-history-salt The Carol Litchfield Collection on the History of Salt]
 
[[பகுப்பு:உப்புகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது