வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 18:
 
=== இயற்பியல் நிலை ===
வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகளில் வினைபடு பொருளின் இயற்பியல் நிலையும் கூட ([[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]]) முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வினைபடு பொருள்கள் அனைத்தும் ஒரே இயற்பியல் நிலைமையில் இருக்கும் போது, உதாரணமாக, நீர்க்கரைசல்களில் நிகழ்வது போல, வெப்பவியல் இயக்கமானது மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்கிறது. வினைபடு பொருள்கள் வெவ்வேறான இயற்பியல் நிலைமைகளில் இருக்கும் போது அவற்றில் வினைபுாியும் பரப்பின் அளவானது குறைவுபடுகிறது. வினையில் ஈடுபடும் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வினையின் வேகம் அதிகரிக்கும். திரவங்கள் மற்றும் வாயுக்களைப் பொறுத்த அளவில் கலக்குதல்(stirring) மற்றும் அதிவேகமான குலுக்குதல்(Vigorous shaking) வினை முழுமையடைய உதவக்கூடும். மிக நுண்ணிய துகள்களாகத் துாளாக்கப்பட்ட திண்மம் அல்லது திரவ வினைபடு பொருள்கள் மிக அதிக அளவிலான வினைபடு பரப்பைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக உடன் வினைபுரியும் வினைபடு பொருள்களுடன் வினைபுரியும் தன்மை அதிகரித்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.<ref>{{cite book | title=வேதியியல் மேல்நிலை முதலாம் ஆண்டு | publisher=தமிழ்நாடு அரசு பாடநுால் கழகம், சென்னை | year=2007 | pages=110}}</ref>
 
=== வினைபடு பொருட்களின் பரப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது