உயிரியல் வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
அண்மித்த ஒரு பொதுவான [[மூதாதை]]யருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான [[பாரம்பரியம்|மரபுபேற்று]] இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் அல்லது வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, அமைப்பொத்த (homologous) உயிரினங்களில் ஒரு பொது மூதாதையிலிருந்து [[மரபுபேற்று]]வழிப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படும்.<ref>{{Harvnb|Mayr|Bock|2002|p=178}}</ref>. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய செயலொத்த (analogous) இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ.கா. [[பறவை]]யும், [[வவ்வா]]லும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே மூதாதையிலிருந்து மரபுவழியில் பெறப்படாத ஒரு இயல்பாக இருப்பதனால், அவற்றை ஒரே [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பிற்குள்]] அடக்குவதில்லை. அதேவேளை வவ்வாலும், [[திமிங்கிலம்|திமிங்கிலமும்]] பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் [[பாலூட்டி]]கள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
 
வகைபாட்டியலின் வரையறை அத்தகவலைப் பெறும் வாயிலுக்கேற்ப வேறுபடுகிறது. என்றாலும் வரையறையின் சாரம் ஒன்றாகவே அமைகிறது; அதாவது உயிரிசார் கருத்துப்படிமமும் பெயரிடல் மரபும் வகைப்படுத்தலும் மாறுவதில்லை.<ref name=Wilkins2011>{{cite web |author=Wilkins, J. S. |url=http://evolvingthoughts.net/2011/02/what-is-systematics-and-what-is-taxonomy/ |title=What is systematics and what is taxonomy? |date=5 February 2011 |deadurl=no |accessdate=21 August 2016}}</ref> மேற்கோள் கருத்துகளாக, அண்மையில் வெளிவந்த சில வரையறைகள் கீழே தரப்படுகின்றன:
 
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்_வகைப்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது