சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
'''சிலந்திகள்''' அல்லது '''எட்டுக்கால் பூச்சிகள்''' என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் [[கணுக்காலி]] வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை [[நூலாம்படை]] என்றும், சிலந்தியை ''நூலாம்பூச்சி'' <ref>{{செ.ப.|பக்கங்கள்=|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+&matchtype=exact&display=utf8}}</ref> என்றும் கூறுவர். சிலந்திகளில் பல வகைகள் பல வகையான நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. மற்ற வகையான பூச்சிகளைப் போல் இவற்றுக்கு உணர்விழைகள் கிடையா. 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 வரை உலகில் 42,751&nbsp; வகையான சிலந்திகள் அல்லது எட்டுக்கால்பூச்சிகள் அறிவியலில் அடையாளம் காணப்பட்டு &nbsp;<ref>Platnick, N. I. 2012. The world spider catalog, version 12.5. American Museum of Natural History, online at http://research.amnh.org/iz/spiders/catalog. DOI: 10.5531/db.iz.0001. பார்க்கக் கிடைக்கும் தளம் (பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2012) [http://research.amnh.org/iz/spiders/catalog/COUNTS.html]</ref> விளக்கப்பட்டுள்ளன. இவை 110 பேரினங்களில் அடங்கும். சிலந்திகள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து வந்திருக்கின்றன.<ref>Kuhn-Nentwig, Lucia, Stocklin, Reto, Nentwig, Wolfgang, "Venom Composition and Strategies in Spiders: Is Everything Possible?" in Jerome Casas (Ed), Advances in Insect Physiology - Spider Physiology and Behaviour: Physiology, Volume 40, Academic Press 2011</ref>. சிலந்திகள் [[அராக்னிடா]] (''Arachnida'') என்னும் [[வகுப்பு (உயிரினம்)|வகுப்பில்]], சிலந்திப்பேரினம் அல்லது ''அரனியே'' (''Araneae'') என்று அழைக்கப்படும் [[வரிசை (உயிரினம்)|வரிசையில்]] உள்ள உயிரினம்.
 
உடற்கூறு அடிப்படையில் சிலந்திகள் மற்ற [[கணுக்காலி|கணுக்காலிகளைப்]] போலல்லாமல் உடல் பகுதிகள் இரண்டு இணைவுத் துண்டுகளாக (tagmata) காணப்படுகிறது. தலைநெஞ்சுப்பகுதி (cephalothorax) மற்றும் வயிற்றுப்பகுதி (abdomen) என்ற அந்த இரண்டு பகுதிகள் சிறிய உருளை வடிவ காம்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பூச்சிகளைப் போல சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் (antennae) இல்லை.மிகவும் பழமையான மிசோதீலே (Mesothelae) குழுவைச்சார்ந்த சிலந்தியைத் தவிர மற்ற கணுக்காலிகளில் சிலந்திகள் அனைத்தும் [[மைய நரம்பு மண்டலம்|மையப்படுத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைக்]] கொண்டுள்ளன.தலைநெஞ்சுப்பகுதியில் நரம்புச்செல்கள் கொத்தாக இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கணுக்காலிகளைப் போல் சிலந்திகளின் கால்களில் விரிவடையக்கூடிய தசைகள் காணப்படுவதில்லை அதற்குப் பதிலாக நீர்ம அழுத்தத்தால் (hydraulic pressure) மேலெழும்பித் தாவுகின்றன.
 
சிலந்தியின் வயிற்றுப் பகுதியில் துணை உறுப்பாகக் காணப்படும் ஆறு விதமான நூற்பு சுரப்பி உறுப்புகள் பட்டு நூலினை வெளித்தள்ளுகின்றன. ஒட்டும் தன்மையுள்ள நூலின் பயன்படுத்தப்பட்ட அளவைப் பொறுத்து சிலந்தி வலைகளின் அளவுகளில் பரவலாக வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுருள் கோள வலைகள் (spiral orb web) சிலந்திகளின் ஆரம்பகால வலைப்பின்னல் வடிவமாக இருக்கின்றன. சில சிலந்திகள் சுருள் கோள வலைகளை விட அதிகப்படியான சிக்கலான நூற்கூடுகளைக் கட்டுகின்றன.பட்டு உற்பத்தி செய்யும் கூம்பல் (spigots) கொண்ட சிலந்தி போன்ற இனம் (arachnids) 386 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெவோனியன் புவியியல் காலத்தில் (Devonian period) தோன்றின, ஆனால் அந்த விலங்குகளுக்கு வெளிப்படையாக நூற்பு உறுப்புகள் (spinnerets) இல்லை.உண்மையான சிலந்திகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய கரிமப்பாறைகளில் (Carboniferous rocks) புதைபடிவங்களாக கண்டிறியப்பட்டுள்ளன. அவை அடிப்படை சிலந்தி இனமான மீசோதீலே பிரிவைச் சார்ந்த சிலந்தியினத்துடன் ஒத்திருந்தது.தற்போதுள்ள நவீன சிலந்தியினங்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூன்றாய காலத்தில் தோன்றிய மைகலோமார்ஃபே (Mygalomorphae) மற்றும் அரானியோமார்ஃபே (Araneomorphae) ஆகியனவாகும்.
 
 
== உடல் கூறு இயல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது