மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
நேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.
 
சுழியல்லாத மின்புலத்தில் ஒரு புள்ளியில் மின்னூட்ட்த்தை வைத்தால் அதன்மீது ஒரு விசை செயல்படும். இந்த விசையின் பருமை கூலம்பு விதியால் தரப்படுகிறது. எனவே மின்னூட்டம் நகர்ந்தால் மின்புலம் அதன்மீது பணி செய்கிறது. இந்த மின்புலத்தின் ஒரு புள்ளியில் நிலவும் மின்னிலை பற்றி விளக்கலாம். ஒரு மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியின் மின்னிலை என்பது அலகு நேர்மின்னூட்டம் ஒன்றை வெளிக் காரணி ஒன்று ஏதாவதொரு மேற்கோள் புள்ளியில் இருந்து மின்புலத்தின் அந்தப் புள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது புரியப்படும் வேலைக்குச் சமம் ஆகும். மின்னிலை வோல்ட் அலகில் அளக்கப்படுகிறது.
 
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மின்சாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது