"எழுத்து முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(→‎உருபனெழுத்து முறைமை: *எழுத்துப்பிழை திருத்தம்*)
== அசை எழுத்து முறைமைகள் ==
''முதன்மைக் கட்டுரை: [[அசையெழுத்து]]''
உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, '''அசையெழுத்து''', [[சொல்|சொற்களை]] உருவாக்கும் [[அசை (மொழியியல்)|அசைகளைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும்பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக [[மெய்யெழுத்து|மெய்யொலியையும்]] அதைத் தொடர்ந்து வரும் [[உயிரெழுத்து|உயிரொலியையும்]] கூட்டாகவோ; அதாவது ஒரு [[உயிர்மெய்யெழுத்து|உயிர்மெய்யொலியையோ]] அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது.
 
ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான அசை அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே அசையெழுத்து முறை மிகவும் பொருத்தமானது. [[ஆங்கில மொழி]]யைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு அசைக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது.
23,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2311374" இருந்து மீள்விக்கப்பட்டது