சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
[[படிமம்:Blutkreislauf.png|thumb|upright|200px|right|மனிதச் சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு ஒட்சியேற்றப்பட்ட குருதியையும், நீலம் ஒட்சியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.]]
'''சுற்றோட்டத் தொகுதி''' (Circulatory system) என்பது, [[ஊட்டச்சத்து]]கள், [[வளிமம்]], [[இயக்குநீர்]]கள், கழிவுகள் என்பவற்றைக் [[உயிரணு|கலங்களுக்கும்]], கலங்களிலிருந்தும் கொண்டு செல்லும் உறுப்புத் தொகுதியாகும் <ref>{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Zoo-TM-1.pdf | title=விலங்கியல் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் | author=பள்ளிக்கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு | authorlink=குருதிச் சுழற்சி | year=2006 | pages=36}}</ref>. இது, [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய்களை எதிர்ப்பதற்கும்]]; [[உடல் வெப்பநிலை]]யையும், கார-அமிலத் தன்மையையும் சமநிலையில் வைத்திருந்து [[நீர்ச் சமநிலை]]யைப் (homeostasis) பேணுவதற்கும் உதவுகிறது.
 
நமது உடலில் உள்ள அனைத்துச் கலங்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்கள், [[ஆக்சிசன்]] தேவை. கலங்களில் ஏற்படும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்கள்]] மூலம் அங்கு தோன்றும் கழிவுப் பொருட்களையும், [[காபனீரொட்சைட்டு]] போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான கலங்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தால் இரத்தத்தைக் கடத்தும் [[குருதிக்குழல்]]கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.
வரிசை 8:
== மனிதச் சுற்றோட்டத் தொகுதி ==
மனிதச் சுற்றோட்டத் தொகுதியின் முக்கிய கூறுகள் [[இதயம்]],[[நுரையீரல்]], [[குருதி]], [[குருதிக்குழல்|குருதிக் கலங்கள்]] (நாடி, நாளம், நுண்துளைக்குழாய்கள் அல்லது மயிர்த்துளைக் குழாய்கள்) என்பனவாகும். ஒரு சுற்றோட்டத் தொகுதி, குருதியை [[ஆக்சிசன்|ஒட்சிசனேற்றுவதற்காக]] [[நுரையீரல்|நுரையீரலுக்குக்]] கொண்டுசெல்லும், ஒரு சுற்றைக் கொண்ட [[நுரையீரல் சுற்றோட்டம்|நுரையீரல் சுற்றோட்டத்தையும்]] (pulmonary circulation); ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை உடலின் பிற உறுப்புக்களுக்குக் கொண்டு செல்லும் [[தொகுதிச் சுற்றோட்டம்|தொகுதிச் சுற்றோட்டத்தையும்]] (systemic circulation) உள்ளடக்கியது.
 
===தமனி===
'''தமனிகள்''' [[குருதிக்குழல்|குருதிக்குழல்களாக]] [[இதயம்|இருதயத்தில்]] இருந்து [[குருதி]]யை வெளியே எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக [[நுரையீரல் தமனிகள்]], [[தொப்புள் தமனிகள்]] ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.
 
[[சுற்றோட்டத் தொகுதி]] [[உயிர்]] வாழ இன்றியமையால் உள்ளது. எல்லா உயிரணுக்களுக்கு [[உயிர்வளி]]யையும், [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறையும்]] வழங்கவதும், அதேபோன்று [[கார்பனீராக்சைடு]], கழிவுப்பொருள்களை நீக்குவதும், [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|காரகாடித்தன்மைச் சுட்டெணை (pH)]] உகந்து பராமரிப்பதும், [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பு அமைப்பின்]] புரதங்கள், உயிரணுக்களின் சுழற்சியை உகந்து பராமரிப்பதும் இதன் வழக்கமான செயல்பாடுகளின் பொறுப்பாகக் கொண்டுள்ளது. [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடுகளில்]], இறப்புக்கு முதன்மையான இரு காரணிகள், [[மாரடைப்பு]]ம் (''Heart Attack'') [[பக்கவாதம்|பக்கவாதமும்]] (''Stroke'') ஆகும். இவை தமனி மண்டலத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சீரழிவை ஏற்படுத்துகின்றது, இது பல்லாண்டுகளாக நீடிக்கும் ஒரு செயல்முறையாகும்.
 
===தந்துகிகள்===
தந்துகிகள் தமனி மற்றும் சிறைகளின் நுண் இழையங்களாகும். இவையே உயிரணுக்களுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் அல்லது உயிரணுக்களிலிருந்து அசுத்த இரத்தத்தை சேகரித்து வரும் நுண் உறுப்புகளாகும்.
 
===சிரைகள்===
''சிரைகள்''' (''Veins'') அல்லது '''நாளங்கள்''' [[இருதயம்|இருதயத்தை]] நோக்கி [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[குருதிக்குழல்]]கள் ஆகும். தந்துகிகளிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற அசுத்தக்குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக [[நுரையீரல் சிரை]]யும், [[தொப்புள் சிரை]]யும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, [[தமனி]]கள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து [[இதயம்|இதயத்திற்கு]] எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் [[கார்பன்-டை-ஆக்ஸைடு]] நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. [[குருதி]]யானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் [[நுரையீரல்|நுரையீரலுக்கும்]] கொண்டு செல்லப்படுகிறது.
 
சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.
 
===இதயம்===
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது