வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 60:
ஆனால் விநியோகிக்கப்பட்ட தானியங்கள் வண்டரித்து பழுதடைந்தவையாக இருந்தன. தாய்மார்கள் இந்த தானியங்களை எடுத்துக்கொண்டு வானொலி நிலையத்துக்கு வந்தனர். அவர்களது முறையீட்டை வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிபரப்பியது.
விசாரணைகள் நடைபெற்று 2000 கோடி ஊழல் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுப் பொருள் விநியோக முறையும் மாற்றப்பட்டது.
 
== இலங்கை வானொலி நிலையம் ==
 
இலங்கை வானொலி பல்வேறு மொழிகளிலும் சர்வதேச நேயர்களுக்கான தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது குறிப்பாக மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னட மொழிகளிலும் தமிழ்நாட்டு நேயர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இலங்கை தந்தி அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பு சேவையினை ஆரம்பித்த இலங்கைவானொலி தற்போது கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் தனது பிரதான நிலையத்தினை கொண்டுள்ளது. ரேடியோ சிலோன் என்ற பெயரில் இயங்கி வந்த இலங்கை வானொலி 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இலங்கை ஓலிபரப்புக்கூட்டுநிறுவனமாக மாறியபின் ஓலிபரப்புத்துறையில் பல வகையிலும் வரலாறுகள் படைத்து தனது அளப்பரிய சாதனையினை நிலைநாட்டியது. மக்கள் விரும்பும் விதத்தில் பல நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்கிய இலங்கை வானொலியானது பிராந்திய சேவைகளையும் ஆரம்பித்து வைத்தது. தொழினுட்பம் குன்றிய காலகட்டத்திலும் மக்கள் மனம் கவரும் வகையிலான நிகழ்ச்சிகள் கடும் முயற்சியின் மத்தியில் ஒலித்தன. இசைக்கச்சேரி, நாடகம், நேரடி அஞ்சல் ,சஞ்சிகை நிகழ்ச்சிகள், சிறுவர் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள், இயல், இசை , முத்தமிழ் படைப்புக்கள் பற்றிய பயன்பெறு நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் அறிவுபூர்வமான கேள்விபதில் நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியூட்டும் பல நிகழ்ச்சிகளையும் நேயர்களுக்கு வழங்கிய பெருமை இலங்கை வானொலியினை சாரும்.
 
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது