தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
படிம ஆய்வுகளின்படி ஜுராசிக் யுகத்தில் வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான [[தெரோபோடு]] என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள [[பறவை]] இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன.
 
மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள்[[பறவை]]<nowiki/>கள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.
 
தொன்மாக்கள் [[வகைப்பாட்டியல்|வகைப்பாடு]], புறத்தோற்றம், [[சூழ்நிலை]] அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. [[தொல்லியல்]] ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள்[[தொல்லுயிரியல்|தொல்லுயிரிய]]<nowiki/>லாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைப்பெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும்[[ஊனுண்ணி]]<nowiki/>களாகவும், சில [[தாவர உண்ணிகளாகவும்உண்ணி]]<nowiki/>களாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும்[[கூடு]]<nowiki/>கட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை[[முட்டை]]<nowiki/>யிடுபவை களாகவும் அறியப்பட்டன.
 
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: [[ஒருநிலக் கொள்கை]].) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது