எழுத்தறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 58:
1953ஆம் ஆண்டு கானான் நாட்டின் ஒரு பகுதியில் முன்று தலை அம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒரே மாதிரியான கிமு 12ஆம் நூற்றாண்டின் கானான் முறை கல்வெட்டு எழுத்துக்கள் பதியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.<ref name="Cross, Frank Moore 1980 p. 1-20">Cross, Frank Moore, "Newly Found Inscriptions in Old Canaanite and Early Phoenician Scripts", ''Bulletin of the American Schools of Oriental Research'', No. 238 (Spring, 1980) p. 1-20.</ref>
ஃப்ராங்க் மூர் கிராஸ் (Frank Moore Cross) என்பாரின் கூற்றுப்படி இந்த கல்வெட்டு எழுத்துகள் தற்போதைய எழுத்துமுறைகளை ஒத்துள்ளன. இந்த் கல்வெட்டு எழுதுக்கள் பட எழுத்துக்களிலிருந்து நேர்க்கோட்டு எழுத்து முறைக்கு மாற்றம் அடையும்போது தோன்றிய எழுத்துக்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. மேலும் இந்த கல்வெட்டுகள் இதற்கு முந்தைய கால எழுத்துக்களுக்கும் தற்போதுள்ள எழுத்துக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை நன்கு விளக்குவதாக உள்ளது என்று கூறுகிறார். கானானைட் மொழியில் மெய்யெழுத்துக்களுக்கான முறைமை பல பிற்கால மொழிகளிலும் இந்த முறைமையைப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. வெண்கல காலத்தின் பிற்பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய பல்வேறு எழுத்துருக்கள் போனீசியன், ஹீப்ரூ, அராமிக் எனும் மூன்று மொழிகளாக பிரித்து விரிவாக்கப்பட்டன.
 
கூடியின் கருத்துப்படி ஆப்பெழுத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் கிரேக்க எழுத்துக்களின் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கக்கூடும். வரலாற்றுப் பூர்வமாக கிரேக்கர்கள் தங்கள் மொழியை போனீஷியன்கள் சீரமைத்ததை உறுதிப்படுத்துகின்றனர். எனினும் பல எழுத்துருவாக்கவியலார் கிமு 1100 ஆண்டுகளுக்குமுன் இருந்த கானானைட் மொழி எழுத்துக்களைக்கொண்டு பண்டைய கிரேக்கர்கள் இசைவான எழுத்தறிவு பெற்றிருந்ததாக நம்புகின்றனர். ஆனால், முற்கால கிரேக்க எழுத்துக்கள் கிமு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கானானைட் மொழி கல்வெட்டுப் பதிவுகள், கிரேக்கர்கள் கிமு 1100லிருந்தே இம்மொழியைக் கையகப்படுத்தி பயன்படுத்துவது உறுதியாகிறது. மேலும் உயிரெழுத்துக்களைக் குறிக்கும் ஐந்து எழுத்துகளைப் பின்னாளில் சேர்த்ததும் உறுதியாகின்றது
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது