ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 62:
==ஓவியத்தில் வரையப் பயன்படுத்திய பொருட்கள்==
ராபியேலின் பல ஓவியங்கள் மரப்பலகைகளின் மீதே வரையப்பட்டுள்ளது (ஓவியம்;மடோனா ஆப் த பிங்).ஆனால் அவர் ஓவியம் தீட்ட துணிகளையும் பயன்படுத்தியுள்ளார் (ஓவியம்:சிஸ்டைன் மடோனா), மேலும் காயக்கூடிய எண்ணெய் வகைகளான ஆளிக்கொட்டை எண்ணெய் மற்றும் வாதுமை எண்ணெய்களைக் கொண்டும் வரைந்துள்ளார். அவருடைய வண்ணத்தட்டு மதிப்பு வாய்ந்த தனித்துவமான வண்ணக் கலவைகளை உருவாக்கி வரைந்துள்ளார். அவரது பல ஓவியங்களில் (ஓவியம்: அன்சிடேய் மடோனா) சிறப்பு வகை மரங்களையும் பயன்படத்தியுள்ளார். மேலும் தனது ஓவயிங்களில் தங்க உலோகப் பொடி கொண்டும் பிசுமத்தைக் கொண்டும் வண்ணம் தீட்டியுள்ளார்<ref>Roy, A., Spring, M., Plazzotta, C. ‘Raphael’s Early Work in the National Gallery: Paintings before Rome‘. ''National Gallery Technical Bulletin'' Vol 25, pp 4–35</ref><ref>[http://colourlex.com/paintings/paintings-painter/italian-painters/ Italian painters] at ColourLex</ref>.
 
==பணிமனை==
ராபியேல் சொந்தமாக ஒரு பணிமனையை கொண்டிருந்ததாக வசாரி கூறுகிறார். அதில் ஐம்பது மாணவர்கள் மற்றும் உதவியார்கள் இருந்ததாகவும் பின்னர் அனைவரும் புகழ்பெற்ற தனிப்பெரும் ஓவியர்களாக மாறியதாகவும் வசாரி கூறுகிறார்.இது மிகப்பெரிய பணிமனையாக ஒற்றை நபரால் கட்டமைக்கப்பட்டது.இத்தாலியின் பிற பகுதிகளிலிருந்தும் திறமையான ஓவியர்களைத் தங்கள் பணிமனை குழுவில் இணைத்துக்கொண்டு உப ஒப்பந்தங்களை அவர்கள் மூலமாகவும் தனது மாணவர்களைக் கொண்டும் ராபியேல் செயல்படுத்தினார்.அவர்களுடைய பணிமனையில் உள் வேலை ஏற்பாடுகளுக்கான ஆதாரங்கள் மிகக்குறைந்த அளவே கிடைத்துள்ளன.<ref>Jones and Penny:146–147, 196–197, and Pon:82–85</ref>
 
ராபியேலிடம் பணிமனையில் மாணவர்களாக இருந்தவர்களில் [[ரோம்]] நகரிலிருந்து வந்த இளம் வயது ''கியுலியோ ரொமானோ'' (ராபியேல் இறக்கும் போது வயது இருபத்தி ஒன்று) மற்றும் ''ஜியான்பிரான்சிஸ்கோ பென்னி'' என்ற ஓவியர் இருவரும் ராபியேலின் இறப்பிற்குப் பிறகு அவரது பணிமனையை விரிவாக்கியதுடன் அவரிக் ஓவியங்களை படைத்து வெளியிடத் துவங்கினர்.கியலியோ அளவிற்கு பென்னி சிறப்படைய வில்லை. இருப்பினும் ராபியேலின் ஓவியங்களை கிட்டத்தட்ட ஒத்த ஓவியங்களை ''கியுலியோ ரொமானோ'' படைத்து புகழ் பெற்றார். ''பெரியோ டி வேகா'' என்ற ஓவியர் மற்றும் கட்டிடப் பொருட்களை சுமக்கும் வேலை செய்தவர் பின்னாளில் ஓவியராக உயர்ந்த பொலிடோரோ டா கிராவாகியோ ஆகியோர் குறிப்பிடத்தக்க ஓவியர்களாவர்.<ref>Jones and Penny:147, 196</ref>1527 ல் ரோம் விலக்க யுத்தத்தின் போது ராபியேலின் மாணவர்கள் ஓவியர்கள் சிதறுண்டனர் பலர் கொல்லப்பட்டனர். <ref>Vasari, Life of Polidoro [http://www.fordham.edu/halsall/basis/vasari/vasari18.htm online in English] Maturino for one is never heard of again</ref>
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராபியேல்_சான்சியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது