தக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ==தக்கர்== 19ஆம் நூற்றண்டுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:12, 13 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

தக்கர்

19ஆம் நூற்றண்டுக்குமுன் இந்தியாவில் நாடெங்கும் பரவியிருந்த கொள்ளைக் கூட்டத்தினர். இவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் அல்லது முஸ்லிம்களேயாயினும் காளியை வழிபட்டனர். இவர்களுக்குப் பெருஞ்செல்வர்கள், தலைவர்கள் ஆகியவர்களின் மறைமுக ஆதரவும் இருந்ததாகச் சொல்வர். இவர்கள் வாணிகர்கள் போலவும், யாத்திரிகர்கள் போலவும்.வேடம்பூண்டு, ஆங்காங்குச் சென்று, வழியில் அகப்பட்டவர்களைக் கழுத்தை இறுக்கிக் கொன்று, அவர்களிடமிருந்த பொருள்களைப் பறித்துக் கொண்டனர். இவர்களின் கொடுமை பொறுக்க முடியாததாக இருக்தது. இவர்களால் மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல அஞ்சினர். 18ஆம் நூற்றண்டில் தக்கர்களின் எண்ணிக்கை மிகுந்தது. 1828-ல் பென்டிங்க் பிரபு இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாகப் பதவியேற்றபின் ஒற்றர்களைக் கொண்டு தக்கர்களின் இரகசியங்களைக் கண்டறிந்தார்.

1829-35-ல் சுமார் 2,000 தக்கர்கள் பிடிபட்டனர். பெரும்பாலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டார்கள்; அல்லது நாடு கடத்தப்பட்டார்கள்.தக்கர்களை ஒழிப்பதில் சர் வில்லியம் சிலீமன் அருந்தொண்டாற்றினார். தக்கர்களை ஒழித்த பெருமை பென்டிங்க்கையே சாரும்.

[1]

  1. http://www.tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கர்&oldid=2369539" இலிருந்து மீள்விக்கப்பட்டது