கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
கடவுள் நம்பிக்கையுடையவர்களின் எண்ணத்தின் படி, கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளியாகவும், பாதுகாப்பாளராகவும் இருக்கிறார். இயற்கையே கடவுள் என கூறுவோருக்கு கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளராக மட்டுமே இருக்கிறார், ஆனால் பிரபஞ்சத்தை காப்பாவராக அல்ல. கடவுள் அனைத்திலும் உள்ளதாவராய் இருக்கிறார் என்னும் கோட்பாடு உள்ளவர்களின் கருத்து கடவுளே தான் பிரபஞ்சம்.நாத்திகத்தில், கடவுள் இருக்கிறார் என நம்பப்படுவதில்லை, கடவுள் தெரியாதவராகவோ அல்லது அறிய முடியாதவராகவோ கருதப்படுகிறார்.பல குறிப்பிடத்தக்க தத்துவவாதிகள் கடவுளின் இருப்பிற்கும் இல்லையில் அதற்கு எதிராகவும் வாதங்களை உருவாக்கியுள்ளனர்.
 
கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.
மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
==இந்து சமயத்தில் கடவுள்==
இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
 
இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும்.வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
சிவன், திருமால், பிரம்மன், சக்தி, லட்சுமி, சரஸ்வதி முதலிய ஏராளமான கடவுள்கள் இந்துகளால் வணங்கப்படுகின்றனர்.<ref>https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D</ref>
==இஸ்லாமிய மதத்தில் கடவுள்==
இசுலாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்
இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.
 
இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்).
 
“கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது