தொடக்க நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
 
== சுருக்கம் ==
கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுக்கிறார். அவர் முதல் மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோரை இன்ப வனம் எனப்படும் ஏதேன் தோட்டத்தில் அமர்த்திய பிறகு நன்மை தீமை அறியச்செய்யும் மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது என எச்சரித்தார். வஞ்சக உயிரினமாக சித்தரிக்கப்படும் ஒரு பேசும் பாம்பு அந்த கனியை உண்ணும்படி ஏவாளைத் தூண்டியதால் அவள் அதை உண்டு பிறகு ஆதாமுக்கும் கொடுத்து உண்ணச்செய்தாள். அதன்பிறகு கடவுள் அவர்களை சபித்து விரட்டினார். இதுவே முதல் மனிதர்களின் வீழ்ச்சி. பிறகு காயின் மற்றும் ஆபேல் ஆகிய இரு மகன்களை ஏவாள் பெற்றெடுத்தாள். ஆபேல்கடவுள் ஆபேலின் காணிக்கையை மட்டும் ஏற்றுக்கொண்டு தன் காணிக்கையை கடவுள் நிராகரித்து விட்டதால் பொறாமை கொண்ட காயின் ஆபேலைக் கொன்றுவிடுகிறான். இதனால் கடவுள் காயினை சபித்தார். பிறகு ஆபேலின் இடத்தை நிரப்ப ஏவாளுக்கு சேத் பிறந்தான்.
 
ஆதாமின் பல தலைமுறைகள் வளர்ந்த பிறகு உலகில் பாவங்கள் அதிகரித்தன. இதனால் கடவுள் மனித இனத்தை அழிக்க முடிவு செய்தார். முதலில் அவர் தனக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொண்ட நோவா மற்றும் அவன் குடும்பத்திடம் ஒரு பெரிய கப்பல் செய்து அதில் அவர்களும் மற்ற உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கும்படி கூறுகிறார். பிறகு கடவுள் மிகப்பெரிய வெள்ளத்தை வரச்செய்தார். அது உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. பிறகு வெள்ளம் வடிந்தபிறகு இனி எப்போதும் இவ்வாறு வெள்ளம் வரச்செய்ய மாட்டேன் என்று கடவுள் உடன்படிக்கை செய்தார். அதற்கு அடையாளமாக வானவில்லைத் தோற்றுவித்தார். பிறகு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாபேல் கோபுரத்தை எழுப்ப முயற்சித்த போது அவர்களுக்கு இடையில் மொழிக்குழப்பத்தை உருவாக்கி அவர்களைப் பிரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தொடக்க_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது