கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் ( indre) பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
 
[[கா. சிவத்தம்பி]] அவர்கள் '''கட்டுரை''' "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். [[க. சொக்கலிங்கம்]] அவர்கள் "ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது