"விக்கிப்பீடியா:ஆகஸ்ட் 28, 2017 மலையக விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மலையக பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத் தலைவர் திரு.விஜயசுரேஷ் மற்றும் ஹட்டன் கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. துரைராசா ஆகியோரின் முன்னிலைப் பங்கேற்புடன் ஆரம்பமானது. சுமார் 36 பங்குபற்றுனர்கள் பங்கேற்றனர்.
 
ஆரம்ப செயலரங்கு ஒன்றுகூடல் அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ப.விஜயகாந்தன் நிகழ்வின் அறிமுகக் குறிப்பினை வழங்கினார். பங்குபற்றுனர்களின் கருத்துதிர்ப்புகளைத் தொடர்ந்து சஞ்சீவி சிவகுமார் விக்கிப்பீடியா, நூலகம் மற்றும் இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் குறித்த அறிமுகத்தை செய்தார். தொடர்ந்து சேவ் பவுண்டேசன் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு செந்தில் தமிழில் கிடைத்தகு கல்வி வளங்கள் குறித்த அறிமுகத்தை வழங்கினார்.
 
தொடர்ந்து கணினி அறையில் செயன்முறை பயிற்சி நடைபெற்றது. விக்கிப்பீடியாவில் கட்டுரை தொகுத்தல் பல்லூடக ஆவணங்களை தொகுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கணினி இணைப்பு பலவீனமாக இருந்தமையால் மெதுவாகவே நகர முடிந்தது. ஆவணகத்தில் தொகுப்பு செய்யப்படும் முறையும் விளக்கப்பட்டது. தொடர்ந்து இணையவழிக்கல்வி வளங்களின் தேடல் மற்றும் பயன்பாடுகள் பற்றி செந்தில் அவர்களின் செயன்முறைப் பயிற்சி இடம் பெற்றது. பதிப்புரிமை மற்றும் படைப்பாக்கப் பொதுமம் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டன.
81

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2410856" இருந்து மீள்விக்கப்பட்டது