உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 77:
வணக்கம் செல்வா, ஓர் உதவி. Titanosaur, sauropod, sauropoda என்ற சொல்லுக்கு தமிழில் என்ன தொன்மா என்று கூறுவது? [[சிங்கோபானா]] என்ற கட்டுரையில் இச்சொற்கள் இடம்பெருகின்றன. --[[பயனர்:Inbamkumar86|ப. இராச்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 17:47, 28 ஆகத்து 2017 (UTC)
:{{ping|Inbamkumar86}} சொற்பிறப்பியலின்படி modern Latin Sauropoda (plural), from Greek sauros ‘lizard’ + pous, pod- ‘foot.’ என்கின்றார்கள். இவற்றின் தலை சிறியதாகவும் கழுத்து நீளமானதாகவும், வாலுள்ள ஐந்து விரல்கள் உள்ள தொன்மா என்கின்றார்கள். பல்லியிடுப்பு நெடுங்கழுத்துத் தொன்மா என்பது விளக்கமாக இருக்கும் Titanosaur என்பதும் இதே நெடுங்கழுத்துத் தொன்மா இனத்தைச் சேர்ந்ததே. ஆனால் இன்னும் பெரிய விலங்கு. எனவே sauropod என்பதை நெடுங்கழுத்துத் தொன்மா என்றும் Titanosaur என்பதை நெடுங்கழுத்துப் பெருந்தொன்மா என்றும் அழைக்கலாம். -poda என்பது பன்மை. வேறுவிதமாகச் சொல்வதானால், பல்லியிடுப்பன், பெரும் பல்லியிடுப்பன் எனலாம். தொன்மா என்பதை எல்லா விலங்குகளுக்கும் சேர்த்துச்சொல்லவேண்டியதில்லை. நெடுங்கழுத்தன் என்றும் சொல்லலாம். Titanosaur என்பதை நெடுங்கழுத்துப் பெருமா என்றும் சொல்லலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 17:55, 1 செப்டம்பர் 2017 (UTC)
 
நன்றி. செல்வா. உங்கள் பரிந்துரை அருமை. --[[பயனர்:Inbamkumar86|ப. இராச்குமார்]] ([[பயனர் பேச்சு:Inbamkumar86|பேச்சு]]) 18:28, 10 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:செல்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது