'''முகம்மது அலி ஜின்னாசின்னா''' ([[உருது]]: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா [[இந்தியப் பிரிவினை|இந்தியா பிரிக்கப்பட்டு]], [[பாகிஸ்தான்]] என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (''Governor-General'') ஆவார்.<ref>[http://www.biography.com/people/muhammad-ali-jinnah-9354710 Muhammad Ali Jinnah]</ref><ref>[http://www.bbc.co.uk/history/historic_figures/jinnah_mohammad_ali.shtml Mohammad Ali Jinnah (1876–1948)]</ref>