பிரான்சிஸ்கோ கோயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 26:
 
== வரலாறு ==
=== இளமைக்காலம் ===
கோயா, அரகோன் இராச்சியத்தில் இருந்த, ஸ்பெயினின் ஃபியுவெண்டிட்டொடொஸ் என்னுமிடத்தில், [[1746]] ஆம் ஆண்டில் ஜோஸ் பெனிட்டோ டி கோயா என்பவருக்கும், கிரேசியா டி லூசியெண்ட்ஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தனது இளமைக் காலத்தில் ஃபியுவெண்டிட்டொடொஸ்சில் உள்ள தனது தாயாரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். இவரது தந்தையார் [[தங்கம்|தங்க]] முலாம் பூசும் தொழில் புரிந்து வந்தார். [[1749]] ஆம் ஆண்டளவில் [[சரகோசா]] என்னும் நகரில் ஒரு வீட்டை வாங்கிய இவரது குடும்பத்தினர் சில காலத்தின் பின் அங்கே குடிபுகுந்தனர். கோயா அங்கே எஸ்க்கியுவெலாஸ் பியாஸ் என்னும் இடத்திலுள்ள பள்ளியில் பயின்றார். இவர் அங்கே [[மாட்டின் சப்பேட்டர்]] (Martin Zapater) என்பவருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இவருடன் கோயா பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த கடிதப் போக்குவரத்துக்கள், கோயாவின் வரலாற்றை எழுதுவதற்கான பெறுமதி மிக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. 14 ஆவது வயதில் கோயா, ஜோஸ் லூஜான் என்னும் ஓவியரிடன் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார்.
 
== இத்தாலி ==
 
இவர் பின்னர் [[மாட்ரிட்]]டுக்குச் சென்று அங்கே ஓவியம் பயின்றார். ஸ்பானிய அரச குடும்பத்தினரின் விருப்பத்துக்குரியவரான [[அன்டன் ராபேல் மெங்ஸ்]] என்னும் ஓவியரும் இவருடன் கூடப் படித்தார். கோயா தனது ஆசிரியருடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை, பரீட்சையிலும் போதுமான அளவு வெற்றிபெறவில்லை. [[1763]] இலும் [[1766]] இலும் ''ராயல் அக்கடமி ஒப் பைன் ஆர்ட்ஸ்'' க்கு அநுமதிக்காக விண்ணப்பித்தும் இவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்கோ_கோயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது