நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொருளடக்க தலைப்பில், 'நிலநடுக்கம்' என்னும் வார்த்தை தேவையற்றது.
வரிசை 16:
மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் [[வடக்கு]] நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய தட்டை விட இந்திய தட்டு வேகமாக நகர்வதால், இந்திய தட்டு ஆசிய தட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே [[இமயமலை]]ப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது [[யூரேசியா]] என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.
 
== நிலநடுக்க வகைகள் ==
 
[[படிமம்:Fault types.png|thumb|புவித்தட்டு அசைவுகளின் வகைகள்]]
வரிசை 23:
புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிச்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிச்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும்.
 
== நிலநடுக்கம் நிகழ்வுத் தரவுகள் ==
ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90%இற்கும் அதிகமான பூகம்பங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன.
 
== நிலநடுக்கத்தை கண்டறிதலும் அளவிடலும் ==
நிலநடுக்கத்தின் வீரியத்தை [[நிலநடுக்கப் பதிவுக் கருவி]] மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும்.
[[படிமம்:Sismografo.svg|thumb|நிலநடுக்கப் பதிவுக் கருவி]]
வரிசை 62:
நிலநடுக்கத்தின் போது ஏற்படும் [[காயம்|காயங்கள்]] மற்றும் உறுப்பு சேதங்கள் [[மரணம்|மரணத்தை]] ஏற்ப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் [[சாலை|சாலைகள்]], [[பாலம்|பாலங்கள்]] உள்ளிட்ட ஏராளமான பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் அடிந்து நாசமாகின்றன அல்லது பெருஞ்சேதமுறுகின்றன (பொதுவாக நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதங்கள் இடிந்து விழுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன). அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கத்தால் நோய்களும் அடிப்படைத் தேவை குறைபாடுகளும் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீதி, உயிர் பிழைத்தவர்களுக்கு மன அழுத்தம் <ref>http://www.nctsn.org/trauma-types/natural-disasters/earthquakes</ref> , மற்றும் அதிக காப்பீட்டு சந்தா போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
 
== நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும் ==
தற்போதைய நவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படக்கூடிய நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 100,000 மனிதர்களால் உணரக்கூடியவையாகும்.<ref name="usgsfacts">{{cite web|url=http://earthquake.usgs.gov/learn/facts.php|title=Earthquake Facts|publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை]]|accessdate=2010-04-25}}</ref><ref name="wp100414">{{Cite news | first=Margaret Webb | last=Pressler | title=More earthquakes than usual? Not really. | url=| work=KidsPost | publisher= Washington Post| location=Washington Post | pages= C10 | date=14 April 2010 | id= | accessdate=}}</ref> சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் [[கலிபோர்னியா]] மற்றும் [[அலாஸ்கா]], [[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]], [[சிலி]], [[பெரு]], [[இந்தோனேசியா]], [[ஈரான்]], [[பாக்கித்தான்]], [[போர்த்துகல்|போர்த்துகலின்]] சில பகுதிகள், [[துருக்கி]], [[நியூசிலாந்து]], [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]], [[இத்தாலி]], [[இந்தியா]] மற்றும் [[ஜப்பான்]] ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்படுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் [[நியூயார்க் நகரம்]], [[இலண்டன்]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] உட்பட, கிட்டத்தட்ட உலகில் எங்கும் ஏற்படலாம். .<ref>
{{cite web
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது