து. பு. ஜாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
[[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] [[கண்டி மாவட்டம்|கண்டி]] மாவட்டத்தில் [[கலகெதரை]] என்ற ஊரில் காசிம் ஜாயா, நோனா ஆகியோருக்குப் பிறந்தார். [[கண்டி]]யில் புனித பவுல் கல்லூரி, கல்கிசை புனித தோமையர் கல்லூரியிலும் கல்வி கற்றவர். [[1913]] ஆம் ஆண்டில் [[லண்டன் பல்கலைக்கழகம்|லண்டன் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்று கண்டி தர்மராஜா கல்லூரியில் சில காலம் பணியாற்றினார். பின்னர் பிரின்சு ஒஃப் வேல்ச கல்லூரியில் 1917 ஆம் ஆண்டு வரையும், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1921 ஆம் ஆண்டில் கொழும்பு சாகிராக் கல்லூரியில் அதிபர் பதவியில் அமர்ந்தார். இவரது காலத்தில் இக்கல்லூரி கல்வியில் பெரும் வளர்ச்சி கண்டது. சாகிரா கல்லூரியின் கிளைப் பள்ளிகளை மாத்தளை, அளுத்கமை, புத்தளம் ஆகிய நகரங்களில் நிறுவினார்.
 
=.=அரசியலில்==
[[1924]] ஆம் ஆண்டில் இவர் அரசியலில் இறங்கினார். அன்றைய [[பிரித்தானிய இலங்கை]]யின் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]க்கு [[1924]] ஆம் ஆண்டில் [[இலங்கைச் சோனகர்|இலங்கை முசுலிம்]]களைப் பிரதிநிதித்துவப் படுத்த அதிகாரபூர்வமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழில் மற்றும் சமூக சேவைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். [[1931]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931|இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில்]] [[கொழும்பு]] மத்தியில் போட்டியிட்டு ஏ. ஈ. முனசிங்கவிடம் தோல்வியுற்றார். பின்னர் [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில்]] நியமன ஆங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு [[1947]] ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/து._பு._ஜாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது