"பீரங்கி வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

232 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''தகரி''' ''(tank)'' அல்லது '''தகர்கலம்''' அல்லது '''பீரங்கி வண்டி''' என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி [[எஃகு]] கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது.
 
== அமைப்பு ==
தற்காலத் தகரிகள் அனைத்துப்பொது இயங்குநிலைத் தரை ஆயுத அமைப்புச் செயல்மேடைகள் ஆகும். இதில் சுழலும் துப்பாக்கிப் படுகையில் பேரளவீட்டுச் சுடுகலன் நிறுவப்பட்டிருக்கும். உடன் எந்திரத் துப்பாக்கிகளும் மற்ற பிற ஆயுதங்களும் அமைந்திருக்கும். படைக்குழுவுக்கும் ஆயுதங்களுக்கும் செலுத்தும் அமைப்புகளுக்கும் இயங்குதிறத்துக்கும் பாதுகாப்பளிக்க இது அடர்ந்த ஊர்திக் கவசத்தால்
மூடப்பட்டுச் சக்கரங்களில் இயங்காமல் சுழல் தடத்தில் இயங்கும். எனவே இவை முரடான தரைப்பரப்பிலும் இயங்கிப் போர்க்களத்தில் மிக மேப்பட்ட இடத்தில் அமைந்து இயங்கவல்லதாக உள்ளது. இந்தக் கூறுபாடுகள் தகரி போர்த்தந்திரத்தோடு செயல்பட வழிவகுக்கிறது. திறம் மிக்க ஆயுதங்களின் சேர்மானம் தகரியின் துப்பாக்கி வழியாகச் சுடுகிறது. இது தனது தற்காப்புதிறத்தால் எதிரிப்படையின் சுடுதலில் இருந்தும் தப்பிக்கவல்லதாகும். இவை முற்றுகை, தற்காப்பு ஆகிய இருநிலைகளிலும் போர்க்களத்தில் கவச வண்டி அலகுகளுக்குத் தேவைப்படும் அனைத்துச் செயல்களையும் ஆற்றும் வல்லமைகொண்ட அலகுகளாக அமைகின்றன.<ref>[[Tank#CITEREFvon Senger und Etterlin1960|von Senger and Etterlin (1960)]], ''The World's Armored Fighting Vehicles'', p.9.</ref> தற்காலத் தகரி முதல் எளிய கவச ஊர்திகளில் இருந்து ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் உருவானதாகும். உள் எரி பொறி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் கவச வண்டிகளின் வேகமான இயக்கத்துக்கு உதவின. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, தகரிகள் தன் முதல் தோற்றத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக பேரளவு திறமை மாற்றங்களைப் பெற்றன.
 
== உருவாக்கம் ==
முதல் உலகப் போரின்போது ஒருங்கே பெரும்பிரித்தானியாவும் பிரான்சும் தகரிகளைத் தனித்தனியாக மேலைய போர்முனையின் குழிப்பள்ள போரை உடைக்க உருவாக்கின. இங்கிலாந்து இலிங்கனில் உள்ள வில்லியம் பாசுட்டர் குழுமம் 1915 இல் உருவாக்கிய முதல் ஆய்த ஊர்தி சின்ன வில்லி என அழைக்கப்பட்டது. இதன் தட்த்தட்டுகளை அக்குழுமத்தின் வில்லியம் டிரைட்டனால் உருவாக்கப்பட்டது, இதன் பல்லிணைஇபேழையும் கல்லும் படைமேலராகிய வால்டேர் கோர்டான் வில்சனால் உருவாக்கப்பட்ட்து.<ref name="Tank origins">{{cite web|url=http://www.bbc.co.uk/news/uk-england-25109879|title=World War One: The tank's secret Lincoln origins|work=BBC News|accessdate=1 April 2015}}</ref> இந்த முதனிலைப் புதிய வடிவமைப்பு, 1916 இல் முதலில் சொம்மே போரில் பயன்படுத்திய பிந்தைய பிரித்தானிய மார்க் I தகரியாக படிமலர்ந்தது.<ref name="Tank origins"/> உருவாக்கத்தின் தொடக்கநிலைக் கட்டங்களிலேயே தகரி எனும் பெயரைப் பிரித்தானியப் படை வழங்கியது. முதல் உலகப் போரில் பிரித்தானியரும் பிரெஞ்சுப் படையும் ஆயிரக்கணக்கான தகரிகளை செய்ய, இதன் வல்லமையில் நம்பிக்கையற்ற செருமானியர் 20 தகரிகளை மட்டுமே உருவாக்கினர்.
 
== இரண்டாம் உலகப்போர் ==
தகரிகள் போரிடைக் காலத்தில் மிகப் பெரியனவாகவும் திறன்மிக்கனவாகவும் படிமலர்ந்து, இரண்டாம் உலகப் போர்க்காலத் தகரிகளாகப் படிமலர்ந்தன. இதில் கவசப் படைக்கலஞ்சார்ந்த பல கருத்துப்படிமங்கள் உருவாக்கப்பட்டன; சோவியத் ஒன்றியம் கால்கின் போரில் 1939 ஆகத்து திங்களில் முதல் பெருந்திரள் தகரி வான் தாக்குதலைத் தொடுத்தது.<ref>[[Tank#CITEREFCoox1939|Coox (1985)]], p. 579, 590, 663</ref> பின்னர், முதன்மைப் போர்க்களத் தகரியின் முன்னோடிகளில் ஒன்றாகிய T-34 வகை தகரியை உருவாக்கியது. இருவாரக் காலத்துக்கும் முன்பாக, செருமனி மின்னல்போர் எனும் பேரளவு கவச ஊர்திகளை வடிவமைத்தது. இதில் ஒடிகள் பூட்டிய தன்னியக்கப் பெருந்திரள் தகரிகள் பயன்பாட்டால், புதுவகைக் காலாட்படை, தரைப்படைக்கல அணி, வான்படையணி ஆகியவற்றை இணைவாக அணிதிரட்டி, எதிரிப்படை முகப்பை உடைத்து பகைவரின் எதிர்ப்பை முறியடித்தது.
 
இரண்டாம் உலகப் போரின் பின்னரைப் பகுதியில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்வெடிப்பு தகரிதகர் படைக்கலங்கள் பாஞ்சர்பாசுட்டு போன்ற எடைகுறைந்த காலாட்படை சுமக்கும் தகரிதகர்ப்பு ஆயுதங்களை உருவாக வழிவகுத்தன. இவை சிலவகை தரிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தன. பனிப்போர்க் கால ஆயுதங்கள் இந்த ஆயுதங்களைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதனால், 1960 களில் மிகவும் மேம்பாடான கவசங்கள் உருவாகின; குறிப்பாக, கூட்டுக் கவசங்கள் உருவாகின. மேம்பாடான பொறிகளும் செலுத்தமும் தொங்கல்களும் இக்காலத் தகரிகளைப் பெரிய அளவில் வளர வழிவகுத்தன. துப்பாக்கித் தொழில்நுட்பம் சில கூறுபாடுகளின் மாற்றங்களாலும் வெடிகுண்டு வடிவமைப்பின் மேம்பாட்டாலும் குறிபார்த்தல் அமைப்புகளின் மேம்பாட்டாலும் கணிசமாக வளர்ந்தது.
 
== பயன்பாடு ==
பனிப்போரின்போது முதன்மைப் போர்த் தகரி பற்றிய கருத்துப்படிமம் உருவாகித் தற்காலப் படைகளின் முதன்மையான உறுப்பாகியது.<ref name = "House1984">[[Tank#CITEREFHouse1984|House (1984)]], ''Toward Combined Arms Warfare:A Survey of 20th Century Tactics, Doctrine, and Organization'' {{Page needed|date=May 2012}}</ref> 21 ஆம் நூற்றாண்டில், சீரிலா பொர்முறைகளின் வளர்நிலைப் பாத்திரத்தாலும் பனிப்போரின் முடிவாலும், விலைமலைந்த ஏவுகல செலுத்த வெடிகுண்டுகள் உலகமெங்கும் தோன்றியதால் தகரிகளின் பயன்பாட்டின் முதன்மைநிலை அருகலானது. இப்போது அவை தனியாகப் பயன்படுவதில்லை. மாறாக அவை கூட்டுப் படைக்கல அணிகளில் காலாட்படையின் போர்க்கல ஊர்திகளில் ஒருபகுதியாக மாறிவிட்டன. இவை கண்காணிப்புவான்கலங்களின் அல்லது தரைநோக்கித் தாக்கும் வான்கலங்களின் துணையோடு செயல்படுகின்றன.<ref>{{Citation|first=Roger| last = Tranquiler | title = Modern Warfare. A French View of Counterinsurgency, trans. Daniel Lee | quote = Pitting a traditional combined armed force trained and equipped to defeat similar military organisations against insurgents reminds one of a pile driver attempting to crush a fly, indefatigably persisting in repeating its efforts.}}{{Page needed|date=May 2012}}</ref>
 
== இந்தியாவில் பீரங்கி வண்டி ==
இந்தியா உருசியவகை T -72 பீரங்கி வண்டி, T-90 பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்துகிறது.
 
அர்ஜுன் என்னும் பீரங்கி வண்டி இந்தியாவின் இன்றியமையாத போர் ஆயுதமாகும். இது முழுக்கமுழுக்க இந்தியாவிலே வடிவமைத்து செய்யப்பட்டது. இதன் வரைவு முதல் உருவாக்கம் வரை சென்னையிலேயே நடந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2432245" இருந்து மீள்விக்கப்பட்டது