கோட்பிரீட் லைப்னிட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ. தி + இலைபுநிட்சு என தமிழ்முறைப்படி பெயரை வழங்கல்
சிNo edit summary
வரிசை 4:
'''கோட்பிரீடு இலைபுனிட்சு''' அல்லது '''கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு,''' (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு [[இடாய்ச்சுலாந்து| இடாய்ச்சுலாந்திய]] மெய்யியலாளராவார். இவரின் பெயரை '''இலீபுநிட்சு''' என்றும் சொல்வார்கள் [[மெய்யியல்|மெய்யியலின்]] வரலாற்றிலும் [[கணிதம்|கணித]] வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், [[இலத்தீன்]] மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
 
[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இரண்டு [[இடாய்ச்சுலாந்து]] நாட்டுப் [[பிரபு]]க்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
{{stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/கோட்பிரீட்_லைப்னிட்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது