எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைகள் இணைக்கப்பட்டுவிட்டன
*உரை திருத்தம்*
வரிசை 3:
 
தேங்காய் எண்ணெய், [[நல்லெண்ணெய்]], [[கடலையெண்ணெய்]], [[வேப்ப எண்ணெய்]], இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெயும் [[பாறைநெய்]] அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.
== எண்ணெய் வகைகள் ==
 
தமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும்.அவை எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படுகின்றன.
=== எண்ணெய் வித்துக்கள் ===
# எள்
# ஆமணக்கு
வரிசை 15:
# பனை
# சூரியகாந்தி
=== நல்லெண்ணெய் ===
எண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.
=== விளக்கெண்ணெய் ===
ஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
=== புன்னை எண்ணெய் ===
புன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.
=== மணிலா எண்ணெய் ===
நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மணிலா எண்ணெய் என அழைக்கப்படுகிறது.
=== தேங்காய் எண்ணெய் ===
தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யாகும்.
=== சளம்பனை எண்ணெய் ===
பனையின் ஒரு வகையான சளம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சளம்பனை எண்ணெய் ([[பாமாயில்]]) ஆகும்.
<ref>அறியப்படாத தமிழகம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது