ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
}}
[[படிமம்:HubbleExploded.svg|thumb|right|450px|Exploded view of the Hubble Telescope. Click for a larger image.]]
'''ஹபிள்''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி''' (''Hubble Space Telescope'') [[டிஸ்கவரி விண்ணோடம்|டிஸ்கவரி]] விண்வெளி ஓடத்தினால் [[1990]] ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதத்தில் வட்டணையில் ஏவப்பட்ட ஒரு [[விண்வெளித் தொலைநோக்கி]] ஆகும். அமெரிக்க வானியலாளரான [[எட்வின் ஹபிள்]] என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஓர் ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான [[மக்கள் தொடர்பு]] நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது. இது [[நாசா]], [[ஐரோப்பிய விண்வெளி முகமை]] ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி ஆகும். [[கொம்ப்டன்காம்ப்டன் காம்மாக்காமாக் கதிர் அவதான நிலையம்வான்காணகம்]], [[சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்]], [[ஸ்பிட்சர்சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி]] ஆகியவற்றுடன் சேர்த்துஆகியவற்றோடு இதுவும் நாசாவின் சிறந்த அவதான நிலையம் ஆகும்வான்காணகமாகும்.
 
[[1940கள்|1940களிலேயே]] விண்வெளித் தொலைநோக்கிகள் பற்றிய கருத்துப்படிமம் முன்மொழியப்பட்டிருந்தது. [[1983]] ஆம் ஆண்டில் இவ்வகைத் தொலைநோக்கியை ஏவும் எண்ணத்துடன் [[1970கள்|1970களில்]] ஹபிள் தொலைநோக்கிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பத் தாமதங்கள், நிதிச் சிக்கல், [[சேலஞ்சர் விபத்து]] போன்றவற்றால் இத் திட்டத்தை நிறைவேற்றுவது தாமதமாகியது. இறுதியாக [[1990]] இல் விண்ணில் இத்தொலைநோக்கி ஏவப்பட்டாலும், இதன் முதன்மை [[தளவாட|ஆடியில்]] பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப் பிழையினால் தொலைநோக்கியின் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் [[1993]] இல் இடம்பெற்ற திருத்தவேலைப் பயணத் திட்டத்தின் மூலம் ஹபிளின் தரம் எதிர்பார்க்கப்பட்ட நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஹபிள் பூமியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துக்கு]] வெளியில் இருப்பதால் மிகவும் நுண்ணிய விவரங்களுடன் கூடிய, பின்புல ஒளி இடையீடுகள் இன்றி, [[ஒளிப்படம்|ஒளிப்படங்களை]] எடுக்ககூடியதாக உள்ளது. ஹபிளின் அவதானிப்புகள் பல வானியற்பியலில் பல முக்கியமான தீர்வுகளுக்கு வழி சமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, [[ஹபிள் விதி|அண்டம் விரிவடையும் வீதத்தைத்]] முடிவு செய்வதில் இதன் அவதானிப்புகள் பெரும் பங்காற்றியுள்ளன.
 
விண்வெளியில், விண்வெளிவீரர்களால் பழுது பார்க்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரே தொலைநோக்கி ஹபிள் ஆகும். இதுவரை நான்கு தடவைகள் திருத்தவேலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1993 இல் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்தின் மூலம் படிமக் குறைபாடு சரிசெய்யப்பட்டது. 2, 3 மற்றும் 4 ஆம் பயணங்களின் போது பல்வேறு துணைத் தொகுதிகள் பழுதுபார்க்கப்பட்டதுடன், பல அவதானிப்புக் கருவிகளும் நவீன திறன்மிக்க கருவிகளால் பதிலீடும் செய்யப்பட்டன. எனினும், 2003 இல் இடம்பெற்ற [[கொலம்பியா விண்வெளி ஓட விபத்து|கொலம்பியா விண்வெளி ஓட விபத்தைத்]] தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் குறித்த அச்சங்களினால் ஐந்தாவது திருத்தவேலைப் பயணம் நிறுத்தப்பட்டது. உற்சாகமான பொதுக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இன்னும் ஒரு இறுதியான திருத்தவேலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு நாசா முடிவு செய்தது. தற்போது இது அக்டோபர் 2008 க்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஹபிள்_விண்வெளித்_தொலைநோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது