வானம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
 
பெரும்பாலான இனங்கள் தரையில் கூடு கட்டுகின்றன, குறிப்பாக காய்ந்த புற்களில். எனினும் சில இனங்கள் கூடுகளை சிக்கலான அமைப்பிலும் மற்றும் பகுதியளவு குவிந்த வடிவிலும் கட்டுகின்றன. சில பாலைவன இனங்கள் புதர்களின் அடியில் கூடு கட்டுகின்றன. காற்றின் காரணமாக கூட்டின் வெப்பத்தைக் குறைக்க இப்படிக் கட்டுகின்றன எனக் கருதப்படுகிறது. வானம்பாடிகளின் முட்டைகள் பொதுவாகப் புள்ளிகளுடன் காணப்படுகிறது. வானம்பாடிகள் இரண்டில் (முக்கியமாகப் பாலைவன இனங்கள்) இருந்து ஆறு முட்டைகள் (முக்கியமாக வெப்ப மண்டல இனங்கள்) வரை இடுகின்றன. முட்டைகள் 11-16 நாட்களில் பொரிக்கின்றன.
 
== கலாச்சாரம் ==
=== இலக்கியங்கள் ===
புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் வானம்பாடிகள் பகலைக் குறிக்கின்றன.
 
=== வளர்ப்புப் பிராணியாக ===
பலகாலமாக வானம்பாடிகள் சீனாவில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. பெய்ஜிங்கில் வானம்பாடிகளுக்கு மற்ற பாடும்பறவைகள் மற்றும் விலங்குகளின் சத்தங்களை எழுப்புவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 வகையான சத்தங்களை எழுப்ப வானம்பாடிகளுக்குக் கற்றுத்தரப்படுகிறது. இது வானம்பாடியின் பதிமூன்று பாடல்கள் என அழைக்கப்படுகிறது. 13 சத்தங்களை சரியான வரிசையில் எழுப்பும் வானம்பாடிகளுக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/வானம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது