இந்திய மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *விரிவாக்கம்*
மேற்கோள்
வரிசை 22:
}}
 
'''இந்திய மயில்''' (''Indian peafowl, [Pavo cristatus]'') [[பசியானிடே]] [[குடும்பம் (உயிரியல்)|குடும்ப]]த்தைச் சேர்ந்த பறவையான [[மயில்|மயிலின்]] இரு பேரினங்களுள் ஒன்றான, '''''பேவோ''''' (Pavo) [[பேரினம் (உயிரியல்)|பேரின]]த்தினுள் அடங்கும் cristatus இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றின் பூர்வீகம் இந்தியத் துணைக்கண்டமாக இருப்பினும், இவை உலகின் பல பாகங்களில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டதால் அங்கும் பரவி காணப்படுகின்றன. பேவோ பேரினத்தினுள் வரும் மற்றொரு இனமான muticus [[பச்சை மயில்]] என அழைக்கப்படும்.<ref name="EOL">{{cite web | url=http://eol.org/pages/915303/details | title=Green Peafowl (Description) | publisher=Encyclopedia Of Life | accessdate=30 சனவரி 2018}}</ref><ref name="pet">{{cite web | url=http://animals.mom.me/the-difference-in-peafowls-peacocks-12626809.html | title=The Difference in Peafowls & Peacocks | accessdate=30 சனவரி 2018}}</ref> இவை இரண்டும் [[தெற்கு ஆசியா|தென்னாசியாவிற்குரிய]] பெரிய வண்ணமயமான கோழி இனவகைப் பறவைகளாகும்.
 
ஆண் மயிலின் கழுத்து, மார்பு, வயிறு பளபளக்கும் கருநீல நிறத்திலும், இறக்கைகளில் வெள்ளையும், பழுப்புமாக பட்டைகளும் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்திலும், பளபளக்கும் கருநீல வட்டங்களையும் கொண்டிருக்கும். தோகையில் உள்ள சில சிறகுகளின் முனை பிற வடிவத்தில் இருக்கும். ஆண் மயில் உருவில் பெரியவை. அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை சுமார் 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் சுமார் 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை சுமார் 4-6 கிலோ இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். எனினும் வால் சிறகுகள் 20 மட்டுமே.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது