இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
== சாதனைகள் ==
 
** இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
** ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டுக்கோ, அழகான லொகேஷன்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு வந்ததில்லை. 'தென்றல் வந்து தீண்டும் போது' என்ற பாடலை உருவாக்க, இசைஞானி எடுத்துக் கொண்டது, வெறும் அரை மணி நேரம் தான்.
* லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை [[1993]] ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
** சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரெக்கார்டிங்கிற்கான மொத்த செலவு வெறும், 10 ஆயிரம். மூன்றே நாளில், வெறும் ஐந்தே கலைஞர்களை வைத்து இசை சேர்க்கப்பட்டது.
** அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை, ஒரு கோடைப் பொழுதின் பிற்பகலில், 'துாங்காத விழிகள் ரெண்டு' பாடலை அமைத்து, மழையையும் வரவழைத்தவர் இசைஞானி.
** 'கவுன்டர் பாயின்ட்' என்ற யுக்தியை, சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற 'என் கண்மணி' என்ற பாடலில் பயன்படுத்தினார்.
** இசைஞானி, 'செஞ்சுருட்டி' ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல், 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' என்ற பாடல்.
** உலகில் எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம், ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல்கள் எழுதப்பட்டு, பாடமாக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்கை நீக்கி, புதிய இசையை எழுதி, வியப்பின் உச்சிக்கு அழைத்து சென்றவர் இசைஞானி. படம், ஹேராம்.
** லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை [[1993]] ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
** சிம்பொனி கம்போஸ் பண்ண குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். வெறும், 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
** படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு, இசையமைத்த ஒரே படம் கரகாட்டக்காரன்.
** ரஜினி, கமல், சிவகுமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் ஆகியோரின் படங்களில், 40 ---- 50 படங்களுக்கு இளையராஜா இசையமைத்து உள்ளார்.
** 'பருவமே, புதிய பாடல் பாடு' என்ற பாடலுக்கு தொடையில் தட்டி, தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர்.
** இந்தியாவில் முதன்முறையாக சிறந்த பின்னணி இசைக்கான விருதை வாங்கியவர். படம், பழசிராஜா
** அவர், முதன்முதலாக, 'ஸ்டீரியோ' முறையில் பாடல்களை பதிவு செய்த படம், ப்ரியா.
** மொத்தம், 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடல்.
** இசைஞானியின் பாடலுக்காக, கதை எழுதி வெற்றி கண்ட படங்கள், வைதேகி காத்திருந்தாள், அரண்மனைக்கிளி.
** இந்தியாவில் கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இளையராஜா படம், புன்னகை மன்னன்.
** 'பஞ்சமுகி' என்ற ராகம், இளையராஜாவால் இயற்றப்பட்டுள்ளது.
** இளையராஜா அவர்கள் வருடத்திற்கு 56 படங்கள் என தொடர்ந்து நான்கு வருடங்கள் பாடல் மற்றும் பின்னணி சேர்ப்பு வேலைகளை முடித்து கொடுத்திருக்கிறார். அதில் பாடலுக்காக ஓடிய படங்கள் அதிகம். <ref>[https://www.youtube.com/watch?v=rwPzBQ8m5J0]</ref>
 
== விருதுகளும் பட்டங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது