மதுரை சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
[[File:Coin of Jalaluddin Ahsan Khan.jpg|right|thumb|ஜலாலுத்தீன் அஹ்ஸன் கானின்
நாணயம்]]
ஜலாலுத்தீன் அஹ்ஸன் கான் மதுரையின் முதல் [[சுல்தான்]] ஆவார். இவரது மகன் இப்ராஹீம் [[டெல்லி]] சுல்தான் முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றினார். மாபார் பிரிந்து சென்ற செய்தியைக் கேட்டவுடன் ஆத்திரம் அடைந்த துக்ளக் இப்ரஹீமைக் கொலை செய்தார். பெரும் படையுடன் மாபாரை மீண்டும் கைப்பற்ற தெற்கு நோக்கி கிளம்பினார். ஆனால் வழியில் உடல் நலக்குறைவினால் படையெடுப்பைக் கைவிட நேர்ந்தது. ஜலாலுத்தீனின் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கியது. ஜலாலுத்தீனின் மகளை [[மொரோக்கோ]] நாட்டின் வரலாற்றாளர் [[இப்னு பதூதா]] மணந்திருந்தார். 1340ஆம் ஆண்டு ஜலாலுத்தீன் அவருடைய பிரபு (சிற்றரசர்) ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் சுல்தானாகிய அலாவுத்தீன் உதாஜி, குதுப்தீன் ஃபிரோஸ் ஆகியோரும் முடிசூடிய குறுகிய காலத்திற்குள் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு பின்னர் மதுரை சுல்தானகம் கியாசுத்தீன் முகமது தம்கானியின் ஆட்சியின் கீழ் வந்தது. கியாசுத்தீனின் ஆட்சிக் காலத்தில் இப்னு பத்தூதா மதுரைக்கு வந்தார். கியாசுத்தீன் [[ஹோய்சாளப் பேரரசு|போசள மன்னர்]] [[மூன்றாம் வீர வல்லாளன்]] என்வருடன் மோதினார்.

கியாசுத்தீன் முதலில் தோல்வி அடைந்தாலும் பின்னர் (1343) கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போதுமுற்றுகையின்போது வல்லாளரை சிறைபிடித்தார். வல்லாளரைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவரது உடலை மதுரையின் கோட்டைச் சுவர்களில் காட்சிக்கு வைத்தார். 1344ஆம் ஆண்டு மருந்து ஒவ்வாமை காரணமாக கியாசுத்தீன் மரணமடைந்தார்.<ref>Aiyangar, p.154</ref><ref name = "B">Aiyangar, p.166-69</ref>
 
கியாசுத்தீன் மரணத்திற்கு பிறகு மதுரை சுல்தானகம் வலுவிழந்தது. விஜயநகரப் பேரரசின் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் தெற்கு நோக்கி படையெடுக்கத் தொடங்கின. கம்பண்ணரின் மனைவி கங்கதேவி எழுதிய ''மதுரா விஜயம்'' என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. 1344-1371 காலகட்டத்தில் நசுருத்தீன் தம்கானி, ஷம்சுத்தீன் ஆதில் ஷா, ஃபக்ருத்தீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர் ஷா ஆகியோர் மதுரையின் சுல்தான்களாக இருந்தனர். விஜய நகரப் படைகள் சம்புவரையர்களை வென்று [[ஸ்ரீரங்கம்|ஸ்ரீரங்கத்தை]] கைப்பற்றி மதுரையை நோக்கி முன்னேறின.
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது