தி மம்மி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
|gross = $415.9 மில்லியன்
}}'''தி மம்மி''' என்பது 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஸ்டீபன் சோமர்ஸ் இயக்கியுள்ளார். [[ரேச்சல் வய்ஸ்]], பிரேன்டன் ஃபிரேசர், ஜான் ஹன்னா, அர்னால்டு வஸ்லோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1932 ஆம் ஆண்டு வெளிவந்த ''தி மம்மி'' திரைப்படத்தின் மறுபதிப்பு ஆகும்.
 
==கதை==
[[எகிப்து]] நாட்டின் [[தீபை]] பகுதியில் கிமு 1290காலக்கட்டங்களில் வாழ்ந்த மிகப்பெரிய தலைமை மந்திரவாதியான இம்ஹோடெபும் முதலாம் பாரோ செடி மன்னனின் மனைவியான ஆங் சூ நமுனும் காதலித்து வந்துள்ளனர். பாரோ மன்னருக்கு இது பற்றி தெரிய வருகையில் இம்ஹோடெபும், ஆங் சூ நமுனும் சேர்ந்து மன்னரை கொலை செய்கிறார்கள். மன்னரை கொலை செய்துவிட்டு ஆங் சூ நமுன் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை செய்தவரின் உடலை ஹன்னபுத்ராவிற்கு எடுத்துச் சென்ற இம்ஹோடெப், உடலிற்கு உரிரூட்டும் சடங்குகளை செய்யத் தொடங்குகிறார். அதற்குள் மன்னரை கொலை செய்த காரணத்திற்காக பாரோ மன்னரின் மெய்காவலர்களான மெஜாய் வீரர்கள் இம்ஹோடெப்பின் இருப்பிடத்திற்கு வந்து உரிரூட்டும் சடங்குகளை தடைபடுத்தி இம்ஹோடெப்பின் சீடர்கள் அனைவரையும் கொலைசெய்து உடலை [[மம்மி]]யாக மாற்றுகின்றனர். இம்ஹோடெப்பிற்கு மட்டும் மிகவும் கடுமையான தண்டைனையான ஹோம் தாய் தண்டனை தருகின்றனர். ஹோம் தாய் தண்டனையின்படி உயிருடன் இம்ஹோடெப்பை சவப்பெட்டிக்குள் போட்டு, மனித மாமிசம் உண்ணும் வண்டுகளையும் போட்டு மூடிய சவப்பெட்டியை அனுகிஸ் தெய்வத்தின் காலடியில் புதைக்கிறார்கள். மேலும் உயிருடன் புதைக்கப்பட்டவன் மீண்டு வரமால் இருக்க மெஜாய்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். மெஜாய்களின் வம்சாவளியினரும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தி_மம்மி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது