துபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 88:
[[படிமம்:Dubai night skyline.jpg|thumb|300px|left|துபையின் இரவுக் காட்சி]]
[[2008]] தரவுகளின்படி துபாயின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 82.11 பில்லியன் [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்<ref name=gdp>{{cite web|url=http://dsc.gov.ae/EN/Pages/GrossDomesticProduct.aspx |title="Gross Domestic Product (GDP) of the Emirate of Dubai 2006–2008" |publisher=Dubai Statistics Centre}}</ref>. துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.
[[படிமம்:Dubai sheikh zayd road.jpg|alt=துபை|thumb|303x303px|ஷேக் சயத் சாலை, துபாய்]]
 
துபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு [[இந்தியா]], [[இங்கிலாந்து]], [[உருசியா]], [[ஈரான்]], [[பாகித்தான்]] மற்றும் [[அமெரிக்கா]] முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/துபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது