வியட்டிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
→‎வகைப்பாடு: இது பியரிய (Pearic) மொழிகளை மிக ஒத்தது
வரிசை 6:
*அரேம் (Arem): இம்மொழி மற்ற வியட்டிய மொழிகளைப் போன்ற மூச்சுவெளிப்பாடு இல்லாத மொழி, ஆனால் வியட்டிய மொழிகளைப் போலவே அடித்தொண்டை மெய்யொலிகளைக் கடையொலிகளாக கொண்டது.
*குஓவ்ய் (தோ) (Cuôi (Thô))
*அகியூ (தவுங்) (Aheu (Thavung)): இம்மொழியானது, மூச்சு வெளிவிட்டும் விடாதும் ஏற்படுத்தும் ஒலிகளை நான்கு நிலையான பாகுபாட்டுடன் முற்றுப்பெறும் மெய்யொலிகள் தொண்டையொலியாக இருக்கும் வகையைக் காட்டுவது. இது பியரிக்[[பியரிய மொழிகள்|பியரிய]] (Pearic) மொழிகளை மிக ஒத்தது, ஆனால் அவற்றில் தொண்டையொலிப்பு உயிரொலியாக இருக்கும்.
*ரூச், சச், மாய், சுர்த் (Ruc, Sach, May, and Chưt): ஒரு கிளைமொழிகள் குழுமம்.; நாங்கு நிலைகளான எடுத்தலோசைகள் கொண்டவை.
*மாலெங் ('போ, பக்கட்டன்) (Maleng (Bo, Pakatan)): ரூச்-சச் (வ்) இல் உள்ளது போன்ற எடுத்தல் ஓசைகள்.
*பொங், உங், தும், கொங்-கெங் ((Pong, Hung, Tum, Khong-Kheng)
*வியட்-முவோங் (Viêt-Mương): [[வியட்னாமிய மொழி|வியட்னாமியமும்]] [[முவோங் மொழி|முவோங் மொழியும்]]. இவ்விரண்டு கிளை மொழிகளும் வியட்டிய மொழிகளின் சொற்தொகுதியோடு ஒப்பிடும் பொழுது ஏறத்தாழ 75% பொதுவானவை. ஒலிப்பின் எடுத்தலோசை உயர்வு-தாழ்வு வேறுபாடுகளிலும் 5-6 ஓசைகள் கொண்டு ஒத்துள்ளது. வியட்டிய மொழிகளில் பொதுவாக மூன்று கீழ் ஓசைகளும் மூன்று உயர் ஓசைகளும் இருக்கும், அவை முறையே தம்முடைய முன்னுருவான மொழிகளில் உள்ளவாறே முதலெழுத்தொலிகள் ஒலிப்புடை மெய்யொலிகளாகவும், ஒலிபற்ற மெய்யொலிகளாகவும் வருபவை. பின்னர் இவை கடைசியாக வரும் மூலமெய்யொலியைப் பொருத்துக் கீழ்க்காணுமாறு பிரிவுபட்டன: சீரான ஓசைகள் திறந்த உயிரொலிகள் கொண்டவை அல்லது கடையொலிகளாக மூக்கொலிகள் கொண்டவை; உயர்ந்தெழும் ஓசையும் தாழ்ந்து விழும் ஓசையும் ஒலிப்பற்ற மெய்யொலிகளாகும் - இவை பின்னர் மறைந்துவிட்டன. தாழ்ந்த ஓசைகள் கடையொலி காற்றொலிகளாக மாறி, அவையும் மறைந்து விட்டன. அடித்தொண்டை உயரோசைகளாக இருந்தவை, அடித்தொண்டை மெய்யொலிகளாக மாறி, பின்னர் அவை அடித்தொண்டையல்லா ஒலிகளாக (deglottalized.) மாறிவிட்டன.
 
==மேலும் படிக்க ==
*Barker, M. E. (1977). ''Articles on Proto-Viet-Muong''. Vietnam publications microfiche series, no. VP70-62. Huntington Beach, Calif: Summer Institute of Linguistics.
"https://ta.wikipedia.org/wiki/வியட்டிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது