"இதயக்கசிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,497 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎நடத்தை: *விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(→‎நடத்தை: *விரிவாக்கம்*)
ஆர். எவ்வு. சி. 6520 இதயத்துடிப்பு நீட்சியானது போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்பு/தரவேட்டுப் போக்குவரத்து அடுக்குப் பாதுகாப்புக் (''TLS/DTLS'') காப்புத் தொடர்பாடல் இணைப்புகளைச் சோதிக்கப் பயன்படுகின்றது. இதன்போது, ஒரு முனையில் இணைக்கப்பட்டுள்ள [[கணினி]]யானது, 16-நுண்மி [[முழு எண்]] நீளம் கொண்ட தரவை (பொதுவாக, ஓர் உரைச்சரம்) உள்ளடக்கிய ஓர் இதயத்துடிப்புச் செய்தியை அனுப்பிவைக்கும். செய்தியைப் பெறும் கணினியும் அதே தரவை அனுப்பிய கணினிக்கு அனுப்பவேண்டும்.
 
ஊறுபட்ட ஓப்பன் எசு. எசு. எல். பதிப்புகள் தரவின் அளவின் அடிப்படையில் நினைவகத் தாங்ககத்தை (''Memory buffer'')) ஒதுக்காமல், வேண்டுகோள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நீளத்தின் அடிப்படையில் நினைவகத் தாங்ககத்தை ஒதுக்குகின்றன. சரிவர எல்லைகளைச் சரிபார்க்காததால், மீண்டும் பெறப்படும் செய்தியானது அனுப்பப்பட்ட தரவையும், அதற்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்ட நினைவகத் தாங்ககத்தில் இருந்த வேறு தரவையும் கொண்டிருக்கக்கூடும்.
 
=== ஊறுபட்ட ஓப்பன் எசு. எசு. எல். நிறுவல்கள் ===
 
1.0.1 தொடக்கம் 1.0.1எவ்வு வரையான ஓப்பன் எசு. எசு. எல். பதிப்புகள் இதயக்கசிவால் ஊறுபட்டுள்ளன. இப்பதிப்புகளின் நிறுவல்கள் ''-DOPENSSL_NO_HEARTBEATS'' என்று தொகுக்கப்பட்டாலேயொழிய, இதயக்கசிவுக்காளாகக்கூடும்.
 
==== ஊறுபட்ட நிரல்களும் சார்புகளும் ====
 
t1_lib.c, d1_both.c ஆகிய நிரல் மூலக்கோப்புகளும் tls1_process_heartbeat(), dtls1_process_heartbeat() ஆகிய சார்புகளும் ஊறுபட்டுள்ளன.
 
=== ஒட்டு ===
 
தேவைக்கதிகமான தரவைக் கேட்கும் இதயத்துடிப்புச் செய்திகளைப் புறக்கணிப்பதன் மூலம் இச்சிக்கலைத் தீர்க்கமுடியும்.
 
ஓப்பன் எசு. எசு. எல். பதிப்பு 1.01சியில் (1.01g) சில எல்லைகளைச் சரிபார்ப்பதன் மூலம் இத்தவறு தவிர்க்கப்படுகின்றது. ஓர் இதயத்துடிப்பு வேண்டுகோளானது இதயக்கசிவை ஏற்படுத்துமா என்று பார்க்க, பின்வரும் சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
<source lang="c">
if (1 + 2 + payload + 16 > s->s3->rrec.length) return 0; /* ஆர். எவ்வு. சி. 6520 பகுதி 4 இற்கு ஏற்ப அமைதியாகப் புறக்கணி */
</source>
 
== மேற்கோள்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2526640" இருந்து மீள்விக்கப்பட்டது