ஆரியச் சக்கரவர்த்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Template added
வம்சத்தின் தோற்றக கதை + வம்சத்தின் வரலாறு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. [[யாழ்ப்பாண வைபவமாலை]], [[வையாபாடல்]] போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன. எனினும் தற்கால ஆய்வாளர்களான பத்மநாதன் (ஆங்கிலத்தில் யாழ்பான அரசு என்ற நூலை எழுதியவர்) போன்றோர், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், [[போர்த்துக்கீசர்]] காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 [[யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்|அரசர்கள்]] குறிக்கப்படுகின்றனர். இவர்கள் [[பரராசசேகரன்]], [[செகராசசேகரன்]] என்ற [[சிம்மாசனம்|சிம்மாசனப்]] பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள்.
 
== வம்சத்தின் தோற்றம் விளக்கும் கதை ==
சிங்கை ஆரியர்களின் தோற்றத்தை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தங்கள் தோற்றத்தை எவ்வாறு விளக்கினார்கள் என்பது தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகையில் 1519-1619 கால பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படும் 'கைலாய மாலை' எனும் நூல் ஒரு சில விளக்கத்தை எமக்கு தருகின்றது:
 
« ''பாண்டி மழவன் பரிந்து சென்று வேண்டி பெருகு புகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய வருகுதி நீ என்று வணங்க, திருவரசு மாறற்க்கு செம்பொன் மகுடம் அணிந்தோனின் வழி காரணிவனான பெரும் காரணத்தால், பேறு தரச் சாற்றும் இவன் மொழியை தன் மனத்தோர்ந்து எண்ணி, மறு மாற்றமுரை யாது நல்ல வாய்மை சொல்லி... துன்று புகழ் தென் மதுரை விட்டு திரு நகர் யாழ்ப்பாணத்து மன்னரசு செய்ய மனமகிழ்ந்து''" (செய்யுள்கள் 79-82 மற்றும் 86)
 
ஆகையால், கடைசி காலத்து யாழ்ப்பாண அரசர்கள் தங்கள் வம்சத்தை உருவாக்கியது [[மதுரை|மதுரையை]] சேர்ந்த ஓர் பாண்டிய இளவரசன் என நம்பினார்கள் என்று கவனிக்க முடிகிறது.
 
== வம்சத்தின் வரலாறு ==
1215 தொடக்கம் 1619 வரை இந்த வம்சத்தை சேர்ந்த 19 மன்னர்கள் [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண]] சிம்மாசனத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் பல்வேறு பெயர்களுடனும் வேவ்வேறு விதமாய் அரசு புரிந்தார்கள்.
 
ஆரம்ப காலத்தில் சிங்கை ஆரியர்கள் [[பாண்டியர்|பாண்டிய]] பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் மதுரையை நாசம் செய்து பாண்டியர்களை வீழ்திய பின்பு தான் (1335 ஆம் ஆண்டில்) இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் முக்கியத்துவம் பெற தொடங்கினர். அக்காலத்து மன்னன் [[மார்த்தாண்ட சிங்கையாரியன்|மார்தாண்ட]] சிங்கை ஆரியனாவான். இவன் காலத்தில் மொரோக்கோ நாட்டில் இருந்து இலங்கை வந்த [[இப்னு பதூதா]] என்பவனின் மூலம் அக்காலத்தில் சிங்கை ஆரியர்கள் தான் இலங்கை தீவிலே முக்கியத்துவம் வாய்ந்த மன்னர்கள் என்று தெரிகிறது. மார்தாண்டன் [[புத்தளம்|புத்தள]] பகுதியை கைப்பற்றி முத்து வியாபாரத்தால் யாழ்ப்பாண ராஜ்யம் செழிப்படன் காணப்பட்டது என்றும் அறிய முடிகின்றது. இவன் காலத்தில் சிங்கள மன்னர்களுடன் போர்களும் நடை பெற்றன.
 
[[கனகசூரிய சிங்கையாரியன்|கனகசூரிய]] சிங்கை ஆரியனின் காலம் (1440 தொடக்கம் 1478 வரை) இன்னொரு முக்கித்துவம் வாய்ந்த ஒன்று: 1450 தொடக்கம் 1467 வரை [[சப்புமால் குமாரயா|செம்பக பெருமான்]] எனும் கோட்டை அரசனின் வளர்ப்பு மகன் யாழ்ப்பாண அரசை கைப்பற்றி அரசு புரிந்தான். இக்காலத்தில் கனகசூரிய மன்னன் மதுரையில் தஞ்சம் தேடினான். இருப்பினும் 1467 இல் ஒரு சிறிய படை எழுப்பிய கனகசூரிய அரசன் யாழ்ப்பாணத்தை மீழப் பெற்றான்.
 
அதன் பிறகு இந்த வம்சத்தை சேர்ந்த மன்னர்களிடம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கூற ஒரு ஆவல் காணப்பட்டது. அக்காரணத்தால் கனகசூரியனின் மகன் பரராஜசேகரனின் காலத்தில் தமிழ் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் இம்மன்னன் காலத்தில் பல்வேறு நூழ்கள் எழுதப்பட்டன (கணிதம், மருத்துவம், தோதிடம் மற்றும் வரலாறு நூழ்கள்)
 
அவனுக்கு பிறகு வரும் மன்னர்கள் 'சிங்கை ஆரியர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்வதை நிருத்தினார்கள். அவ்வம்சம் மெல்ல மெல்ல அதன் அதிகாரத்தை இழக்க தொடங்கியது. [[முதலாம் சங்கிலி|முதலாம் சங்கிலியம்]] மற்றும் [[இரண்டாம் சங்கிலி|இரண்டாம் சங்கிலியன்]] போன்ற மன்னர்கள் யாழ்ப்பாண அரசின் புகழை மீழ பெருவதற்க்கு முயர்சித்தனர் ஆனால் 1619 ஆம் ஆண்டில் போர்த்துகேயர் சங்கிலிக்கு தூக்கு தண்டனை விதித்ததன் மூலம் வம்ச அழிவுக்கும் காரணமாகினார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆரியச்_சக்கரவர்த்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது