இலங்கை இனமோதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
[[படிமம்:Bandaranayaka.jpg|200px|thumb|பண்டார நாயக்கா]]
 
===பண்டார நாயக்காவின் சிங்களம் மட்டும்===
தனிச் சிங்கள மொழியை எடுத்துக் கொண்டால் அனைத்து மக்களுடைய ஞாபத்துக்கு வரும் விடயம் 1956ஆம் ஆண்டு பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட் “சிங்களம் மட்டும்” என்ற சட்டமே ஆகும். இச்சட்டத்திற்கு முன்னர் நாட்டின் நீதிமன்ற மொழியாக, தந்திச் செயன்முறைகளிலும் ஆங்கில மொழியே உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்பட்டது. பாராளுமன்ற விவாதங்கள் கூட ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட போது தமிழ் அல்லது சிங்களத்தில் உரையாற்ற சபாநாயகரின் விசேட அனுமதியை பெறவேண்டி இருந்தது.
 
வரிசை 27:
 
 
===பண்டா – செல்வா ஒப்பந்தம்===
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டம் தொடரும் வேளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பண்டாரநாயக்கா இணங்கினார். இதனால் சமஷ்டிக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தி 1956 ஜூலை 26ஆம் திகதி பண்டா – செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் தமிழ் மொழிக்குரிய அந்தஸ்த்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உரிய அதிகாரப் பண்முகவாக்கம் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வூடன்படிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்ததுடன், பண்டாரநாயக்காவூக்கு ஆதரவூ வழங்கிய பௌத்த பிக்குகள் கடுமையாக எதிர்த்தனர். பத்தேகம விமலவம்ச தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன்னாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
 
[[படிமம்:jayewardene.gif|200px|thumb|ஜே.ஆர் ஜயவர்த்தன]]
===ஜே.ஆர் ஜயவர்த்தன கண்டி பாதை யாத்திரை===
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் ஜயவர்த்தன கண்டி பாதை யாத்திரையை மேற்கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை பதவியை எதிர்ப்பார்க்கும் ஜே.ஆர் ஜயவர்தன பண்டா – செல்வா ஓப்பந்தத்திற்கு எதிராக இவ்விதம் கண்டியில் இருந்து கொழும்புக்கான யாத்திரையினை மேற்கொண்டமையானது, கட்சிக்குள் காணப்பட்ட தலைமை பதவிக்கான போட்டியாகவூம் கட்சிகளுக்கு இடையே சதிகளை ஏற்படுத்தும் ஒன்றாகவூம் செயற்படுத்தப்பட்டது. இவ்வாறான எதிர்ப்புக்ள் காரணமாக இவ் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
 
வரிசை 41:
 
 
===1972,1978 ஆம் ஆண்டு யாப்பில் இலங்கையின் மொழிக் கொள்கை===
1972ஆம் ஆண்டு யாப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் மொழிக் கொள்கை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி அரசியல் யாப்பின் மூலம் சிங்கள மொழி நாட்டின் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்கப்பட்டது. தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு யாப்பில் அத்தியாயம் 4, உறுப்புரை 18 இல் இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாக வேண்டும் என்பதுடன்இ உறுப்புரை 19 இல் இலங்கையின் தேசிய மொழியாக சிங்களமும் தமிழும் காணப்படுகின்றது எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது. 21(1) உறுப்புரையில் அரச கரும மொழியே இலங்கையின் நிருவாக மொழியாதல் வேண்டும் எனவூம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_இனமோதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது